பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
520

21

காவற் பிரிவு

21.2. பிரிவுகேட்டிரங்கல்

   
பிரிவுகேட்டிரங்கல் என்பது பிரிவறிவித்த தோழிக்கு, முற்காலத்துக் குரவர்களாற் பாதுகாக்கப்படு நம்மை வந்து யானை தெறப்புக, அதனைவிலக்கி நம்முயிர் தந்தவர், இன்று தம்மல்ல தில்லாத இக்காலத்துத் தாம் நினைந்திருக்கின்ற திதுவோ? இது தமக்குத் தகுமோவெனத் தலைமகனது பிரிவுகேட்டுத் தலைமகளிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

313. சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
        குழைசெவிச் செம்முகமாத்
    தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
        தோர்கருப் புச்சிலையோன்

_________________________________________________

இளையவன் - பின்றோன்றிய யாக்கையை யுடையாரெல்லாரும் மூப்பவும் தான் நிலைபெற்ற விளமையை யுடையனாதலின் எல்லார்க்கும் மிளையான்; முன்னவன் - உலகத்திற்கு முன்னுள்ளோன்; பின்னவன் -அதற்குப் பின்னுமுள்ளோன்; முப்புரங்கள் வீப்பான் - மூன்று புரங்களையுங் கெடுப்பான்; வியன் தில்லையான் - அகன்ற தில்லைக்கண்ணான்; அருளால் நமர் விரி நீர் உலகம் காப்பான் பிரியக் கருதுகின்றார் - அவனதேவலால் நமர் விரிந்த நீராற் சூழப்பட்ட வுலகத்தைக் காக்கவேண்டிப் பிரியக்கருதா நின்றார் எ-று.

    தில்லையா னேவலாவது எல்லா வுயிர்களையு மரசன் காக்கவென்னுந் தருமநூல் விதி. காத்தலாவது தன் வினைசெய்வாரானுங்கள்வரானும் பகைவரானும் உயிர்கட்கு வருமச்சத்தை நீக்குதல். தில்லையானருளா லென்பதற்கு அவனதருளா னுலகத்தைக் காக்குந் தன்மையை யெய்தினானாதலின் அக்காவற்குப் பிரிகின்றானென்றுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: காவற்குப் பிரியும் பிரிவுணர்த்துதல்.

312

21.2.  மன்னவன் பிரிவு நன்னுத லறிந்து
     பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது.


   
இதன் பொருள்: கள் துறு புரி குழலாய் - பூவிற்றேனை யுடைய நெருங்கிய சுருண்ட குழலையுடையாய்; சிறுகண் - சிறிய கண்ணினையும்; பெருங்கை - பெரிய கையினையும்; திண் கோடு - திண்ணியகோட்டினையும்; குழை செவி - குழைந்த செவியினையும்; செம்முக மாத் தெறு கட்டு அழிய முன் உய்யச் செய்தோர்-சிவந்த