பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
522

22

22. பகைதணிவினைப்பிரிவு

இனிப் பகைதணிவினைப் பிரிவு என்பது தம்மிற்பகைத்த வேந்தரைப் பகையைத்தணித்து இருவரையும் பொருந்தப் பண்ணுதற்குப் பிரிவு. அதுவருமாறு

    பிரிவு கூறல் வருத்தந் தணித்த
    லிருபகை தணித்தற் கேக லென்ப.

22.1 பிரிவுகூறல்

   
பிரிவுகூறல் என்பது ஒருவரதுள்ளமிகுதியை ஒருவர் தணித்தற்கரிதாகிய இருவேந்தர் தம்முட்பகைத்து உடன்மடியப் புகுதா நின்றாரெனக் கேட்டு, அவ்விருவரையு மடக்கவல்ல திறலுடைய ராதலின், அவரைப் பகைதணித்து அவர் தம்மிலொன்றுபட வேண்டி நின்னைப்பிரியக் கருதாநின்றாரெனத் தலைமகன் பகைதணிக்கப் பிரியலுறாநின்றமை தோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

314. மிகைதணித் தற்கரி தாமிரு
        வேந்தர்வெம் போர்மிடைந்த
    பகைதணித் தற்குப் படர்தலுற்
        றார்நமர் பல்பிறவித்

_________________________________________________

பகைதணிவினைப்பிரிவு - இதன் பொருள்: பிரிவுகூறல், வருத்தந் தணித்தல் என விவை இரண்டும், பகைதணிவினைப் பிரிவாம் எ-று, அவற்றுள்-

22.1.  துன்னுபகை தணிப்ப மன்னவன் பிரிவு
      நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.

   
இதன் பொருள்: பல் பிறவித் தொகை தணித்தற்கு என்னை ஆண்டு கொண்டோன் தில்லை - பேரருளினராதலின் தாமளிக்கு மிடத்துப் பல பிறவித்தொகையான் வருங் கழிபெருந் துன்ப முடையாரையே வேண்டுதலின் என்னையடிமைக் கொண்டவனது தில்லைக்கண்; சூழ்பொழில் வாய் முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ் தரு மொய் குழல் - சூழ்ந்த பொழிலிடத்துளவாகிய போதுகளாற் றனது நறுநாற்ற