பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
525

23

23. வேந்தற்குற்றுழிப்பிரிவு

இனி வேந்தற்குற்றுழிப்பிரிவு என்பது ஒருவேந்தனுக்கொரு வேந்தன் றொலைந்து வந்தடைந்தால் அவனுக்குதவி செய்யப் பிரியாநிற்றல். அதுவருமாறு

    பிரிந்தமை கூறல் பிரிவாற் றாமை
    கார்மிசை வைத்தல் காரை நோக்கி
    வருந்தி யுரைத்தன் மலர்க்குழ லரிவை
    கூதிர்கண்டு கவறல் குளிர்முன் பனிக்கவ
    ணொந்து கூற னோக்கிப் பின்பனிக்
    கிரங்கி யுரைத்த லிளவேனில் கண்டவ
    ளின்ன லெய்த லிதுவவர் குறித்த
    பருவ மாமென வரவு கூறல்
    பருவமறைத் துரைத்தன் மறுத்துரைத் தல்லொடு
    தேர்வரவு கூறல் வினைமுற்றி நினைத
    னிலைமைநினைந் துரைத்தன் முகிலொடு கூறல்
    வரவெடுத் துரைத்தன் மறவாமை கூறன்
    மற்றிவை யீரெட்டு முற்றுழிப் பிரிவாம்.

_____________________________________________________________

    வேந்தற்குற்றுழிப்பிரிவு - இதன் பொருள்: பிரிந்தமைகூறல், பிரிவாற்றாமை கார்மிசைவைத்தல், வானோக்கிவருந்தல், கூதிர் கண்டுகவறல், முன்பனிக்கு நொந்துரைத்தல், பின்பனிநினைந்திரங்கல், இளவேனில் கண்டின்னலெய்தல், பருவங்காட்டி வற்புறுத்தல், பருவமன் றென்றுகூறல், மறுத்துக்கூறல், தேர்வரவுகூறல், வினைமுற்றிநினைதல், நிலைமை நினைந்துகூறல், முகிலொடுகூறல், வரவெடுத்துரைத்தல், மறவாமைகூறல் எனவிவை பதினாறும் வேந்தற்குற் றுழிப்பிரிவாம் எ-று. அவற்றுள்-