23
வேந்தற் குற்றுளிப்
பிரிவு
23.2 பிரிவாற்றாமைகார்மிசைவைத்தல்
பிரிவாற்றாமைகார் மிசைவைத்தல்
என்பது பிரிவுகேட்ட தலைமகள், தனது வருத்தங்கண்டு காதலர் வினைவயிற்பிரிய நீ வருந்தினால்
வினைமுடியுமாறென்னோ வென்ற தோழிக்கு, யானவர் பிரிந்ததற்கு வருந்துகின்றேனல்லேன்; இக்கார்முகில்
சென்று அப்பாசறைக்கண்ணே தோன்றுமாயின், நம்மை நினைந்தாற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரென்று
அதற்கு வருந்துகின்றே னெனக் கார்மிசைவைத்துத் தனது வருத்தங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
317. பொன்னி வளைத்த
புனல்சூழ்
நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
கவரும் வியன்முகிலே.
317.
________________________________________________
23.2. வேந்தற் குற்றுழி விறலோன்
பிரிய
ஏந்திழை பாங்கிக் கெடுத்து ரைத்தது.
இதன் பொருள்: பொன்னி
வளைத்த புனல் சூழ் நிலவிப் பொலிபுலியூர்-பொன்னி சுற்றுதலானுண்டாகிய புனலாற் சூழப்பட்ட நிலைபெற்றுப்
பொலிகின்ற புலியூரில்; வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் - வன்னித்தளிராற்
சூழப்பட்ட நெடிய சடையையுடையவனை வணங்காதாரைப்போல; துன்னி வளைத்த நம் தோன்றற்கு - இடர்ப்படப்
பகைவரைக்கிட்டிச் சூழ்போகிய நம்முடைய தோன்றற்கு; மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்
முகில் - மின்னி யுலகத்தை வந்துவளைத்துப் பரந்த கடலைப்பருகும் பெரியமுகில்; பாசறைத் தோன்றும்
கொல் -பாசறைக்கண்ணே சென்று தோன்றுமோ! எ-று.
வளைத்தலை விரிநீர்மேலேற்றினுமமையும்.
தோன்றுமாயின் அவர் ஆற்றாராவரென யானாற்றேனாகின்றேனென்பது கருத்து. பொன்னிவளைத்த புனலென்பதற்குப்
பொன்னியாற்றகையப்பட்ட
|