பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
528

23

வேந்தற் குற்றுளிப் பிரிவு

23.3 வானோக்கிவருந்தல்

   
வானோக்கிவருந்தல் என்பது உற்றுழிப்பிரிந்த தலைமகன், பார்ப்புக்களோடு பெடைக்குருகைச் சேவல் தன் சிறகானொடுக் கிப் பனியான்வரும் மிக்க குளிரைப் பாதுகாக்கின்ற இரவின்கண் எனது போதரவு அவளுக்கென்னாங் கொல்லோவெனத் தலைமகளது வடிவை நினைந்து வானை நோக்கி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

318. கோலித் திகழ்சிற கொன்றி
        னொடுக்கிப் பெடைக்குருகு
    பாலித் திரும்பனி பார்ப்பொடு
        சேவல் பயிலிரவின்
    மாலித் தனையறி யாமறை
        யோனுறை யம்பலமே
    போலித் திருநுத லாட்கென்ன
        தாங்கொலென் போதரவே.

318

___________________________________________________________

புனலென்றும், வன்னிவளைத்த சடையென்பதற்குத் தீயை வளைத்தாற் போலுஞ் சடையென்று முரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றுவித்தல்.

317

23.3.  மானோக்கி வடிவுநினைந்தோன்
      வானோக்கி வருந்தியது.


   
இதன் பொருள்: பார்ப்பொடு பெடைக் குருகு திகழ் சிறகு ஒன்றின் கோலி ஒடுக்கிப் பாலித்து - பார்ப்புக்களோடு பெடைக்குருகை விளங்காநின்ற சிறகொன்றினாற் கோலியொடுக்கிப் பாதுகாத்து; இரும் பனி சேவல் பயில் இரவின் - கொண்டற்றுவலையால் வரும் மிக்ககுளிரைச் சேவல் தானுழக்கு மிரவின்கண்; மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே போலித் திருநுதலாட்கு - மாலாற் சிறிது மறியாத அந்தணனுறையும் அம்பலத்தைப்போல் வாளாகிய திருநுதலாட்கு; என் போதரவு என்னதாம் கொல் - எனது போதரவு எத்தன்மையதாகுமோ! எ-று.

   
இரவினென்னதாமென வியையும். நாம் இக்காலத்து நங்காதலிக்குப் பனிமருந்தாயிற்றிலேமென்னும் உள்ளத்தனாகலின், பெடை யொடுக்கிய சிறகைத் திகழ்சிறகெனப் புனைந்து கூறினான்.