23
வேந்தற் குற்றுளிப்
பிரிவு
23.4 கூதிர்கண்டு கவறல்
கூதிர்கண்டு கவறல் என்பது விழாநின்ற
பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவாநிற்ப, மலைத்திரளையேறித் துணையில்லாதாரைத் தேடும்
புயலினம் நமக்கேயன்றித் தம்மை யடைந்தார்க் குதவிசெய்யச் சென்றார்க்குஞ் சென்று
பொருந்துமோ? பொருந்துமாயின், நம்மை நினைந்து ஆற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரெனத்
தலைமகள் கூதிர்கண்டு கவலாநிற்றல். அதற்குச் செய்யுள்-
319. கருப்பினம் மேவும்
பொழிற்றில்லை
மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென்
றார்க்குஞ்சென்
றல்குங்கொல் வீழ்பனிவாய்
____________________________________________________________
போலித்திருநுதலாட்கென்பதற்கு அம்பலம்போலும்
இத்திருநுதலாட் கென்றுரைப்பினு மமையும். இத்திருநுதலாளென்றான் தன்னெஞ்சத்தளாகலின். மெய்ப்பாடு:
அச்சம். பயன்: மீடற்கொருப்படுதல்.
318
23.3. இருங்கூதிர் எதிர்வுகண்டு
கருங்குழலி கவலையுற்றது.
இதன் பொருள்: வீழ் பனிவாய்
நெருப்பினம் மேய்-விழா நின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவாநிற்ப; நெடுமால்
எழில் தோன்றச் சென்று-நெடிய மாயவனதெழில் கண்டார்க்குப் புலப்படச்சென்று; ஆங்கு நின்ற
பொருப்பினம் ஏறி - அவ்விடத்து நின்ற மலைத்திரளையேறி; தமியரைப் பார்க்கும் புயலினம் -
துணையில்லாதாரைத் தேடும் புயலினங்கள்; கருப்பினம் மேவும் பொழில் தில்லை மன்னன்கண் ஆர்
அருளால்-கருப்புத்திரள் பொருந்தும் பொழிலையுடைய தில்லையின் மன்னவன்கணுண்டாகிய
மிக்கவருளான்; விருப்புஇனம் மேவச் சென்றார்க்கும் சென்று அல்கும் கொல் - விருப்பையுடைய தம்மினந்
தம்மா லுதவிபெற்றுப் பொருந்தும் வண்ணஞ் சென்றார்க்குஞ் சென்றுதங்குமோ! எ-று.
அல்குதலான் வருந்
துயருறுதனோக்கிச் சென்றார்க்குமென நான்காவதனாற் கூறினாள். நெருப்பினமே யென்பதனைப் புயன் மேலேற்றி
இடிநெருப்பென்றும், சென்றென்பதனை மலைமேலேற்றி உயர்ந்தென்று உரைப்பினுமமையும். மெய்ப்பாடு:
அழுகை. பயன்: தோழியை யாற்று வித்தல்.
319
|