பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
530

New Page 1

வேந்தற் குற்றுளிப் பிரிவு

நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
        தோன்றச்சென் றாங்குநின்ற
    பொருப்பின மேறித் தமியரைப்
        பார்க்கும் புயலினமே.

319

23.5 முன்பனிக்கு நொந்துரைத்தல்

   
முன்பனிக்கு நொந்துரைத்தல் என்பது மக்களேயன்றிப் புள்ளுந் தம்பெடையைச் சிறகானொடுக்கிப் பிள்ளைகளையுந் தழுவி இனஞ்சூழ வெருவாது துயிலப்பெறுகின்ற இம்மயங்கிருட்கண், இடையறாது விழாநின்ற பனியிடைக்கிடந்து வாடித் துயர்வாயாக வென்று என்னைப் பெற்றவளை நோவதல்லது யான் யாரை நோவேனென முன்பனிக்காற்றாது தாயொடு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

320. சுற்றின வீழ்பனி தூங்கத்
        துவண்டு துயர்கவென்று
    பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
        பெடைசிற கானொடுக்கிப்

_____________________________________________________________

23.5.  ஆன்றபனிக் காற்றாதழிந்
      தீன்றவளை ஏழைநொந்தது.


   
இதன் பொருள்: புற்றில வாள் அரவன் தில்லைப் புள்ளும்-புற்றையுடையவல்லாத ஒளியையுடைய பாம்பையணிந்தவனது தில்லையின் மக்களேயன்றிப் புள்ளும்; பெடை சிறகான் ஒடுக்கி - பெடையைச் சிறகானொடுக்கி; தம்பிள்ளை தழீஇ - தம் பிள்ளைகளையுந் தழுவி; இனம் சூழ்ந்து துயிலப் பெறும் இம் மயங்கு இருள் - இனஞ்சூழ்ந்து துயிலப் பெறும் இச் செறிந்த விருட்கண்ணே; சுற்றின - மேனி யெங்குஞ்சுற்றி; வீழ் பனி தூங்க - வீழாநின்ற பனி இடையறாதுநிற்ப; துவண்டு துயர்க என்று-அதற்கோர் மருந்தின்றித் துயர்வாயாகவென்று; எனைப் பெற்றவளே பெற்றாள் - என்னை யீன்றவளே ஈன்றாள்; இனி யான் யாரைநோவது! எ-று.

    சுற்றின தூங்கவென வியையும். மயங்கிருட்கட்டுயர்வாயாக வெனக் கூட்டுக. சுற்றினவென்பது பெயரெச்சமுமாம். மற்று: அசை நிலை. புற்றிலவாள ரவ னென்பதற்கு முன்னுரைத்த (தி.8 கோவை பா.97) துரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: ஆற்றாமை நீங்குதல்.