புற
வேந்தற் குற்றுளிப்
பிரிவு
புற்றில வாளர வன்தில்லைப்
புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
பெறுமிம் மயங்கிருளே.
320
23.6 பின்பனி நினைந்திரங்கல்
பின்பனி நினைந்திரங்கல் என்பது
இப்பெரியபனிவையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு அவள் பொறுக்குமளவன்று; அவளைச்
சொல்லுகின்றதென்! எனக்கு மாற்றுதலரிதென்பது போதர, மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி,
வான் சரத்தைத் தருமாயின், அதனோடொக்குமெனத் தலைமகன் தலைமகளது துயரநினைந் திரங்காநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
321. புரமன் றயரப்
பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற்
றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
___________________________________________________________
23.6. இரும் பனியின் எதிர்வு
கண்டு
சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.
இதன் பொருள் : இரும் பனி
வையம் எங்கும் பரந்து பாரித்தவா-பெரிய பனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு; தில்லைச்
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று - தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; மிக்க
தமியருக்கு - மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி - உயிர்கவர வெகுண்டு; வான் சரம்
தருமேல் - வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும் - அதனோடொக்கும் எ-று.
புரம் அயர அன்று
பொருப்புவில் ஏந்தி - புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி; புத்தேளிர் நாப்பண்
- தேவர்நடுவே; அயனை அன்று சிரம் செற்றோன் தில்லைச் சிற்றம்பலம் - அவர்க்குத் தலைவனாகிய
அயனையன்று சிரமரிந்த வனது தில்லைச் சிற்றம்பலமெனக் கூட்டுக.
|