பரமன
வேந்தற் குற்றுளிப்
பிரிவு
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.
321
23.7 இளவேனில் கண்டின்ன லெய்தல்
இளவேனில்கண்டின்னலெய்தல் என்பது
மேன்மேலும் நிறம் பெற்றிருளாநின்ற இக்குயில்கள், மாம்பொழிலைச் சுற்றும் வந்து பற்றின; இனி
யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலே னெனத் தலைமகள் இளவேனில்கண் டின்னலெய்தாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
322. வாழும் படியொன்றுங் கண்டிலம்
வாழியிம்
மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வால்தொண்டை யங்கனிவாய்
________________________________________________
பரந்தெங்குந் தருமேலென்றியைப்பினுமமையும்.
(அன்றுவானென்பது பாட மாயின் வையத்தை யன்றி அவ்வானமுமென உரைக்க) இக்காலத்து அவளாற்றாமை
சொல்லவேண்டுமோ எனக்கு மாற்றுலதரி தென்பது போதரத் தமியருக்கெனப் பொதுமையாற் கூறினான்.
இதனைத் தோழி கூற்றாகவுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.
321
23.7. இன்னிள வேனில் முன்னுவது
கண்டு
மென்னகைப் பேதை இன்ன லெய்தியது.
இதன் பொருள் : அம்
தொண்டைக் கனிவாய் - அழகிய தொண்டைக்கனி போலும் வாயினையும்; யாழின் மொழி மங்கை பங்கன்
சிற்றம்பலம் ஆதரியா - யாழோசைபோலு மினிய மொழியினையுமுடைய மங்கையது கூற்றையுடையானது சிற்றம்பலத்தை
விரும்பாத; கூழின் மலி மனம் போன்று-உணவாற் செருக்கு மனம் போல; இருளா நின்ற கோகிலம் -
ஒரு காலைக் கொருகால் நிறம் பெற்றிருளாநின்ற குயில்கள்; இம்மாம் பொழில் தேன் சூழும்முகச்
சுற்றும் பற்றின - இம் மாம் பொழிற்கட் குடைதலாற் றேன் சுற்று முகமெங்கும் வந்துபற்றின;
வாழும் படி ஒன்றும் கண்டிலம் - இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலேம் எ-று.
|