பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
533

வேந்தற் குற்றுளிப் பிரிவு

    யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
        றம்பலம் ஆதரியாக்
    கூழின் மலிமனம் போன்றிரு
        ளாநின்ற கோகிலமே.

322

23.8 பருவங்காட்டி வற்புறுத்தல்

   
பருவங்காட்டி வற்புறுத்தல் என்பது தலைமகன் தான் வருதற்குக் குறித்துப்போகிய கார்ப்பருவத்தினது வரவுகண்டு கலங்காநின்ற தலைமகளுக்கு, இக்கார்வந்து வானிடத்துப் பரந்தமையான், நம்மைக் கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாராநிற்பக் காணப்படுவதே இனியுள்ளதெனத் தோழி அப்பருவந் தன்னையே காட்டி, அவளை வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

323. பூண்பதென் றேகொண்ட பாம்பன்
        புலியூ ரரன்மிடற்றின்
    மாண்பதென் றேயெண வானின்
        மலரும் மணந்தவர்தேர்

_________________________________________________

வாழியென்றது வாழ்வாயாகவென்னும் பொருட்டாய் எதிர் முகமாக்கி நின்றது. தேன் சூழுமுகைச்சுற்றும் பற்றினவென்பது பாடமாயின், மலருமளவுங் காலம் பார்த்துத் தேன்கள் சூழுமுகை யென்க. மெய்ப்பாடு அது. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

    கிழவி நிலையே வினையிடத் துரையார்
    வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்

(தொல்-பொருள். கற்பியல் - 45) என்பதனான், இக்கிளவியைந்தும் காலங்காட்ட வேண்டி இத்துறையுட் கூறினாரென்பது கருத்தாகக் கொள்க.

322

23.8.  கார்வருமெனக் கலங்குமாதரைக்
      தேர்வருமெனத் தெளிவித்தது.


   
இதன் பொருள்: கார் மலர்த் தேன் பாண் பதன் தேர் குழலாய்-கார்காலத்து மலரை யூதுந்தேன் பாட்டினது செவ்வியை யாராயுங் குழலையுடையாய்; பூண்பது என்றே கொண்ட பாம்பன்-பூணப்படு மணியென்றே கொள்ளப்பட்ட பாம்பினை யுடையான்; புலியூர்