க
வேந்தற் குற்றுளிப்
பிரிவு
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
வாய்த்த பனிமுகிலே.
323
23.9 பருவமன்றென்று கூறல்
பருவமன்றென்று கூறல் என்பது காரும்
வந்தது; காந்தளும் மலராநின்றன; காதலர் வாராதிருந்த தென்னோ வென்று கலங்காநின்ற தலைமகளுக்கு,
சிற்றம்பலத்தின்கண்ணே குடமுழா முழங்க அதனையறியாது காரென்றுகொண்டு இக்காந் தண்மலர்ந்தன; நீ
யிதனைப் பருவமென்று கலங்காதொழியெனத் தலைமகன் வரவு நீட்டித்தலால் தோழி அவள் கலக்கந்தீரப்
பருவத்தைப் பருவ மன்றென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
324. தெளிதரல் காரெனச்
சீரனஞ்
சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற்
றோன்நட
மாடக்கண் ணார்முழவந்
____________________________________________________________
அரன் - புலியூரரன்; மிடற்றின்
மாண்பது என்றே எண - அவனது மிடற்றி னழகதாமென்று கருதும்வண்ணம்; எழில் வாய்த்த பனிமுகில்
வானின் மலரும் - எழில்வாய்த்தலையுடையவாகிய பனிமுகில்கள் வானிடத்துப் பரவாநிற்கின்றன;
அதனான், மணந்தவர் தேர் இன்று நாளை இங்கே வரக் காண்பது அன்றே - நம்மைக்கலந்தவரது தேர்
இன்றாக நாளையாக இங்கே வாராநிற்பக் காணப்படுவதல்லவே? இனி யாற்றாயாகற்பாலையல்லை எ-று.
தேரிங்கே வருவதனைக் காணுமதல்லவே
இனியுள்ளதென மொழிமாற்றியுரைப்பினுமமையும். கான்மலரென்பதூஉம், எழில்வாய வென்பதூஉம் பாடம்.
மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல்.
323
23.9. காரெனக் கலங்கும்
ஏரெழிற் கண்ணிக்கு
இன்றுணை தோழி யன்றென்று மறுத்தது.
இதன் பொருள்: அடியேன்
களி தர - அடியேன் களிப்பை யுண்டாக்க; சிற்றம்பலத்துக் கார் மிடற்றோன் நடம் ஆட-
|