New Page 1
வேந்தற் குற்றுளிப்
பிரிவு
துளிதரற் காரென ஆர்த்தன
ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
பாரித் தலர்ந்தனவே.
324
23.10 மறுத்துக் கூறல்
மறுத்துக் கூறல் என்பது பருவமன்றென்ற
தோழிக்கு, காந்தளேயன்றி இதுவும் பொய்யோவெனத் தோன்றியினது மலரைக் காட்டி, இது
பருவமேயென்று அவளோடு தலைமகள் மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
325. தேன்றிக் கிலங்கு
கழலழல்
வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
கண்டன் குழையெழில்நாண்
____________________________________________________________
சிற்றம்பலத்தின்கண்ணே கரிய மிடற்றையுடையவன்
கூத்தாடா நிற்ப; கண் ஆர் முழவம் துளி தரல் கார் என் ஆர்த்தன - முகமமைந்த முழவங்கள் துளியைத்தருதலையுடைய
முகில்போல முழங்கின; ஆர்ப்ப காந்தளும் தொக்கு உன் குழல் போன்று - முழங்க அவற்றை முழவமென்று
ணராது காந்தளுந் திரண்டு உன்குழலையொத்து; அளிதரப் பாந்தளைப் பாரித்து அலர்ந்தன - நறுநாற்ற
மளிகளைக் கொணர்தரப் பாம்புபோலுந் துடுப்புக்களைப் பரப்பி அலர்ந்தன; அதனால், சீர் அனம்
- சீரையுடைய அன்னமே; கார் எனத் தெளிதரல் - இதனைக் காரென்று தெளியற்பாலையல்லை எ-று.
களித்தரவென்பது களிதரவென்று நின்றதெனினுமமையும்.
பாரித்தென்பது உவமச்சொல்லெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல்.
324
23.10. பருவமன் றென்று
பாங்கி பகர
மருவமர் கோதை மறுத்து ரைத்தது.
இதன் பொருள்: தேன்-தேனையொப்பான்;
திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் - திசைகளிலே விளங்காநின்ற வீரக்கழலை யுடைய அழல்வண்ணன்;
சிற்றம்பலத்து எம் கோன் - சிற்றம்பலத்தின் கணுளனாகிய வெங்கோன்; திக்கு இலங்கு திண் தோள்
கொண்டல் கண்டன் - திசைகளிலே விளங்காநின்ற திண்ணிய தோள்களையுங்
|