New Page 1
வேந்தற் குற்றுளிப் பிரிவு
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல
ரும்பொய்ம்மை
யோமெய்யிற் றோன்றுவதே.
325
23.11. தேர்வரவு கூறல்
தேர்வரவு கூறல் என்பது மறுத்துக்கூறின
தலைமகளுக்கு, கொண்டல்கள் எட்டுத்திசைக்கண்ணும் வாராநின்றமையின், இது பருவமே; இனியுடன்றமன்னர்
தம்முட் பொருந்துதலான் நம்மைக் கலந்தவர் தேர் நம்மில்லின்கணின்று வந்து தோன்றுமென்று அவள்
கலக்கந்தீரத் தோழி தலைமகனது தேர்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
326. திருமா லறியாச் செறிகழல்
தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
போற்கொண்ட லெண்டிசையும்
_______________________________________________________________
கொண்டல்போலுங் கண்டத்தையுமுடையான்;
குழை எழில் நாண் போன்று-அவனுடைய குழையும் எழிலையுடைய நாணுமாகிய பாம்பையொத்து; இக் கடி மலர்க்
காந்தளும் போந்து - இக்கடிமலர்க் காந்தளினது துடுப்புக்களும் புறப்பட்டு; அவன் கை அனல் போல்
- அவனதுகையிற் றீயைப் போல; தோன்றிக் கடி மலரும் மெய்யின் தோன்றுவது பொய்ம்மையோ-தோன்றியினது
புதுமலரும் மெய்யாகத் தோன்றுகின்ற விது பொய்யோ! எ-று.
கடியென்பது நாற்றம். கடிமலர் முதலாகிய
தன்பொருட் கேற்றவடை. மெய்யிற்றோன்றுவ தென்பதற்கு மெய்போலத் தோன்றுவதெனினு மமையும். காந்தளு
மின்றென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
325
23.11. பூங்கொடி மருளப்
பாங்கி தெருட்டியது.
இதன் பொருள்: திருமால்
அறியா - திருமாலறியப்படாத; செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்து எம் கரு மால் விடை உடையோன்
கண்டம் போல்-செறிந்த வீரக்கழலையுடைய திருவடியையுடைய
|