பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
537

வேந்தற் குற்றுளிப் பிரிவு

வருமா லுடன்மன் பொருந்தல்
        திருந்த மணந்தவர்தேர்
    பொருமா லயிற்கண்நல் லாயின்று
        தோன்றுநம் பொன்னகர்க்கே.

326

23.12 வினைமுற்றிநினைதல்

   
வினைமுற்றிநினைதல் என்பது வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைமகன், வினைமுற்றியபின்னர், கயலையும் வில்லையுங் கொண்டு மன்கோபமுங்காட்டி ஒரு திருமுகம் வாராநின்றது; இனிக் கடிதுபோதுமெனத் தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது முகநினைந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்-

327. புயலோங் கலர்சடை ஏற்றவன்
        சிற்றம் பலம்புகழும்
    மயலோங் கிருங்களி யானை
        வரகுணன் வெற்பின்வைத்த

________________________________________________________________

தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய கரிய மாலாகிய விடையையுடையவனது கண்டம்போல விருண்டு; கொண்டல் எண் திசையும் வரும் - கொண்டல்கள் எட்டுத் திசைக்கண்ணும் வாரா நின்றன; அதனால், பொரும் மால் அயில் கண் நல்லாய் - தம்மிற்பொரும் பெரியவேல்போலுங் கண்ணையுடைய நல்லாய்; மணந்தவர் தேர் - நம்மைக் கலந்தவரது தேர்; உடல் மன்பொருந்தல் திருந்த - உடன்றமன்னர் தம்முட் பொருந்துதல் திருந்துதலால்; நம் பொன் நகர்க்கு இன்று தோன்றும் - நம் பொன்னையுடைய வில்லின்கண் இன்று வந்து தோன்றும் எ-று.

    உடன்மன்பொருந்தறிருந்த மணந்தவரென்பதற்கு மன்னர் பொருந் தும்வண்ணம் அவரைச் சென்று கூடினவரென்றுரைப் பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளையாற்றுவித்தல்.

326

23.12.  பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
      மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.

   
இதன் பொருள்: செயல் ஓங்கு எயில் எரி செய்த பின்-செய்தலையுடைய உயர்ந்த மதிலை எரியாக்கியபின்; இன்று ஓர்