கய
வேந்தற் குற்றுளிப் பிரிவு
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
இன்றோர் திருமுகமே.
327
______________________________________________________________
திருமுகம் - இன்று திருவையுடைய தொருமுகம்;
கயல் - கயல் போலுங் கண்ணையும்; ஓங்கு இருஞ்சிலை கொண்டு - மிகப் பெரியவிற்போலும் புருவத்தையுமுடைத்தாய்;
மன் கோபமும் காட்டி வரும் - தங்கிய விந்திரகோபம் போலும் வாயையுங் காட்டி வாராநின்றது;
இனிக் கடிதுபோதும் எ-று.
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றுவன்
சிற்றம்பலம் புகழும் - நீரை உயர்ந்த விரிசடையின்கணேற்றவனது சிற்றம்பலத்தையே பரவும்; மயல்
ஓங்கு இருங் களி யானை வரகுணன் வெற்பின் வைத்த கயல் - மயக்கத்தையுடைய உயர்ந்த பெரிய
களியானையையுடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த கயலெனக் கூட்டுக.
இன்று ஓராணையோலை அரையன்பொறியாகிய
கயலையும் வில்லையுமுடைத்தாய் மன்னன் முனிவையுங்காட்டி வாராநின்றதெனச் சிலேடை வகையான்
ஒருபொருடோன்றிய வாறறிக. மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் கேட்டுக் கடிதூர்தல்.
327
|