23
வேந்தற் குற்றுளிப் பிரிவு
23.13 நிலைமைநினைந்து கூறல்
நிலைமைநினைந்து கூறல் என்பது
வினை முற்றியபின்னர் அவள் முகங்கண்டு வாராநின்றவன், புறாக்கள் தந்துணையோடு துயின்று
முன்றிற்கண் விளையாடுவகண்டு இது நமக்கரிதாயிற் றென்று என்னிலைமை நினைந் தாற்றகில்லாளாவள்;
நீ விரையத் தேரைச் செலுத்துவாயாகவெனத் தலைமகளது நிலைமை நினைந்து தேர்ப்பாகனுக்குக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
328. சிறப்பிற் றிகழ்சிவன்
சிற்றம்
பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக
தேர்பிறங்
கும்மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினின்
துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை
தேரும் எழில்நகர்க்கே.
328
23.13. பொற்றொடி நிலைமை
மற்றவன் நினைந்து
திருந்துதேர்ப் பாகற்கு
வருந்துபு புகன்றது.
இதன் பொருள்: பிறங்கும்
ஒளி ஆர் நிறப் பொன் புரிசை மறுகினின்-மிக்க வொளியார்ந்த நிறத்தையுடைய செம்பொன்னானியன்ற
உயர்ந்த மதிலையுடைய வூரிற்றெருவின்கண்; துன்னி - சேர்ந்து விளையாடி; மட நடைப் புள் - மென்னடையையுடைய
மாடப்புறாக்கள்; இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் - இறப்பின்கட் டுயின்று முற்றத்தின்க
ணிரைதேர்ந்துண்ணும்; எழில் நகர்க்கு - அவளிருந்த வெழிலையுடைய இல்லத்திற்கு; சிறப்பின்திகழ்
சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர் தம் பிறப்பின் - சிறப்புக்களாற் பொலியுஞ் சிவனது
சிற்றம்பலத்தைச் சென்றடைந்தவர்கடம் பிறவிபோல; துனைந்து பெருகுக தேர் - விரைந்து முடுகுவதாக
இத்தேர் எ-று.
புறாக்கள் துணையோடு
துயின்று முன்றிலின்கண் விளையாடு வன கண்டு ஆற்றகில்லாளென்பது போதர, இறப்பிற்றுயின்று முற்றத்திரைதேரு
மென்றான். சிற்றம்பலஞ் சென்று சேர்ந்தவர் பிறவியிறுதிக்கட் பேரின்ப மெய்துமாறுபோல யானுஞ்
சுரஞ்
|