23
வேந்தற் குற்றுளிப் பிரிவு
23.14 முகிலொடுகூறல்
முகிலொடுகூறல் என்பது காரோட்டங்கண்ட
பாகன் அதனோடு விரையத் தேரோட்டாநிற்பான், பிரிதலால் திருந்திய வழகெல்லாம் அழிந்து
துன்புறாநின்றவளது சீரிய நகரின்கண், வாராநின்ற வெனது தேரின்முற்பட்டுச் சென்றியங்காதொழிய
வேண்டும்; இயங்கினும், அத்தமியாள்கேட்ப முழங்காதொழிய வேண்டுமெனத் தலைமகன், முந்துற்றுச் செல்லாநின்ற
முகிலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
329. அருந்தே ரழிந்தனம்
ஆலமென்
றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
மலர்த்தாள் வணங்கலர்போல்
______________________________________________________________
செலலிறுதிக்கட் பெருந்தோண் முயங்குவலென்னுங்
கருத்தாற் பிறப்பிற் றுனைந்து பெருகுக தேரென்றான். துன்னுமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை.
பயன்: கேட்ட பாகன் விரைந்து தேர் பண்ணுவானாதல்.
328
23.14. முனைவற் குற்றுழி வினைமுற்றி
வருவோன்
கழும லெய்திச் செழுமுகிற் குரைத்தது.
இதன் பொருள்: ஆலம்
அருந்து - நஞ்சையருந்த வேண்டும்; ஏர் அழிந்தனம் என்று ஓலம் இடும் இமையோர் மருந்து - இதனானழ
கழிந்தோமென்று முறையிடுந்தேவர்க்கு அந்நஞ்சால் வரும் இடர்க்கு மருந்தாயவன்; ஏர் அணி அம்பலத்தோன்
- அழகையுடைய அம்பலத்தின்கண்ணான்; மலர்த்தாள் வணங்கலர் போல் - அவனது மலர்போலுந்தாளை
வணங்காதாரைப்போல; திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் - திருந்திய வழகெல்லாமழிந்து துன்பத்தை
யுண்டாக்கும்; செல்வி சீர் நகர்க்கு - இல்வாழ்க்கைச் செல்வத்தை யுடையவளது அழகையுடைய வூரின்கண்;
வளமுகிலே - வளமுகிலே; வரும் என் தேர் இதன்முன் வழங்கேல் - வாராநின்றவெனது தேரிதனின் முற்பட்டுச்
சென்றியங்கா தொழிய வேண்டும்; முழங்கேல் - இயங்கினும் அத்தமியள் கேட்ப முழங்காதொழிய வேண்டும்
எ-று.
ஏரணியென்பதற்கு மிக்கவழகென்றும்,
பழங்கண்டருமென்
|