த
வேந்தற் குற்றுளிப் பிரிவு
திருந்தே ரழிந்து பழங்கண்
தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
முழங்கேல் வளமுகிலே.
329
23.15 வரவெடுத்துரைத்தல்
வரவெடுத்துரைத்தல் எனபது தலைமகன்
முகிலொடு வாரா நிற்பக்கண்ட தோழி, வணங்குவாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும் வணங்காது
மாறுபட்டவரடையாளங்களையும் தமது தேருக்கு முன்னாகக்கொண்டு, வீரமுரசார்ப்ப, ஆலியாநின்ற
மாவினோடும் வந்தணுகினார்; இனி நமக்கொரு குறையில்லை யெனத் தலைமகளுக்கு அவன்வரவெடுத்துக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
330. பணிவார் குழையெழி
லோன்தில்லைச்
சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
பொலிகநம் மன்னர்முன்னாப்
____________________________________________________________
பதற்கு துன்பத்தையெனக்குத்
தருமென்று முரைப்பினுமமையும். வழங்கே லென்பதற்குப் பெய்யவேண்டாவென்றுரைப்பாருமுளர். நகர் இல்லெனினுமமையும்.
முனைவன் - இறைவன். மெய்ப்பாடு: அது. பயன்: கேட்டபாகன் றேர்விரைந்து கடாவுதல்.
329
23.15. வினை முற்றிய வேந்தன்
வரவு
புனையிழைத் தோழி
பொற்றொடிக் குரைத்தது.
இதன் பொருள்: பணி
வார் குழை எழிலோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய - பணியாகி நீண்ட குழையானுண்டாகிய
அழகையுடையவனது தில்லைச்சிற்றம்பலத்தையொக்கும்; மணிவார் குழல் மட மாதே -நீலமணிபோலு நீண்ட
குழலையுடைய மடப்பத்தை யுடைய மாதே; பொலிக -பொலிக; நம்மன்னர் - நம்முடைய மன்னர்; பணிவார்
திறையும் - வந்து வணங்குவாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும்; பகைத்தவர் சின்னமும் - பணியாது
மாறுபட்டவரடையாளங்களையும்; வண் தேர் முன்னாக்கொண்டு - தமது வண்டேர்க்கு முன்னாகக் கொண்டு;
அணிவார் முரசினொடு-
|