பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
542

பண

வேந்தற் குற்றுளிப் பிரிவு

    பணிவார் திறையும் பகைத்தவர்
        சின்னமுங் கொண்டுவண்தேர்
    அணிவார் முரசினொ டாலிக்கும்
        மாவோ டணுகினரே.

330

23.16 மறவாமை கூறல்

   
மறவாமைகூறல் என்பது வினைமுற்றிவந்து தலைமகளோடு பள்ளியிடத்தானாகிய தலைமகன், நீயிர் வினையிடத்தெம்மை மறந்தீரேயென்ற தோழிக்கு, யான் பாசறைக்கட்டாழ்த்தவிடத்தும், கண் முத்திலங்க நின்று, இவள் என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்கிற்றிலள்; ஆதலால், யான் மறக்குமாறென்னோவெனத் தானவளைமறவாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

331. கருங்குவ ளைக்கடி மாமலர்
        முத்தங் கலந்திலங்க
    நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
        றிலள்நின்று நான்முகனோ

_______________________________________________________________

அணியப்பட்ட வாரையுடைய வீரமுரசினோடும்; ஆலிக்கும் மாவோடு-ஆலியாநிற்கு மாவினோடும்; அணுகினர் - வந்தணுகினார் எ-று.

    வண்டேரொடென்பதனைத் தொகுக்கும்வழித் தொகுத்துக் கூறினாரெனினு மமையும். இப்பொருட்கு முன்னாக வந்து பணிவாரென்றுரைக்க, மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை மகிழ்வித்தல்.

330

23.16.  பாசறை முற்றிப் பைந்தொடியோ டிருந்து
      மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.


   
இதன் பொருள்: நான்முகனோடு ஒருங்கு வளைக் கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய் - நான்முகனோடுங்கூடச் சங்கை யேந்திய கையையுடையவனு மறியாதவனது தில்லையை யொப்பாய்; மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலும் - முனை மருங்கு சூழ்ந்து மன்னனது பாசறைக்கண் யான்றாழ்த்த