New Page 1
உரைமாட்சி
பொருளிலக்கணச் செய்திகள் :
82ஆம் பாடலில் “மாதே புனத்திடை
வாளா வருவர்வந்தியாதுஞ் சொல்லார், யாதே செயத்தக் கதுமது வார்குழலேந்திழையே” என்ற தொடரில்
முதலில் மாதே என்று விளித்துப் பின்னும் ஏந்திழையே என்று அழைத்தமைக்கு அமைதி கூறுமுகத்தான்,
முகம் புகுகின்றாள் ஆதலின் மாதே என்று அழைத்த பின்னரும் ஏந்திழையே என்றாள் என்று தலைவியின்
நினைவு அறியாநிற்கும் தோழியின் நுண்மதியை யுணர்த்துகின்றார் உரையாசிரியர்.
4ஆம் பாடல் உரை இறுதியில் கைக்கிளை
முதற் பெருந்திணை யிறுவாய் எழுதிணையினுள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த
புறமாயினும் கிளவிக்கோவையின் எடுத்துக் கோடற்கண் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமையை
நோக்கிக் கைக்கிளை தழீ இயினார். பெருந்திணை தழுவுதல் சிறப்பின்மையின் நீக்கினார் என்றும்,
70ஆம் பாடலுரையில் இவை நான்கும் பெருந்திணைப் பாற்படும். என்னை, அகத் தமிழ்ச் சிதைவாகலான்.
என்னை, “கைக்கிளை பெருந்திணை அகப்புறம் ஆகும்.” இவற்றுள் கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம்.
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். என்னை, “ஒப்பில் கூட்டமும் மூத்தோர் முயக்கமும், செப்பிய
அகத் தமிழ்ச் சிதைவும் பெருந்திணை” என்றும் கூறியுள்ளவை அகப்புறச் செய்திகள் ஆகும்.
விளக்க உரையில் குறிப்பிடும்
நயங்கள் :
பேராசிரியர் நயமாக உரை எழுதும்
திறத்தை ஏறத்தாழ 70 பாடல்களில் கண்டு சுவைக்கலாம்.
5ஆம் பாடலில் ‘அணியும்
அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்’ என்ற தொடருக்கு எனக்கு ஆபரணமும், அமிழ்தும் என் உயிரும் ஆயவன்
என்று பொருள் கூறி, அணி என்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழிபெருஞ் சுவையோடு உறுதிபயத்தலுடைமையான்.
ஆவியென்றார் காதலிக்கப்படும் பொருள்கள் எல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கும்
இறைவனோடு சார்ந்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவே ஆயினும், ‘பொருளது புரைவே
புணர்ப்போன் குறிப்பின், மருளற வரூஉ மரபிற் றென்ப’ என்பதனான் ஈண்டுச் சொல்வானது கருத்துவகையானும்,
உலகத்துப் பொருள்களுள் அவற்றினூங்கு மிக்கன வின்மையானும் உயர்ந்தனவாய் உவமை ஆயின என்று
விளக்கியுள்ளமை அவருடைய நயவுரைப்
|