24
24. பொருள் வயிற்பிரிவு
இனிப் பொருள்வயிற் பிரிதல் என்பது
குரவர்களாற் படைக்கப்பட்ட பொருள்கொண்டு இல்லறஞ்செய்தால் அதனான் வரும் பயன் அவர்க்காமத்துணையல்லது
தமக்காகாமையால் தமது பொருள்கொண் டில்லறஞ் செய்தற்குப் பொருடேடப் பிரியா நிற்றல்.
அதுவருமாறு-
வாட்டங் கூறல் பிரிவுநினை வுரைத்த
லாற்றாது புலம்ப லாற்றாமை கூற
றிணைபெயர்த் துரைத்தல் பொருத்தமறிந்
துரைத்தல்
பிரிந்தமை கூறல் பிரிவாற் றாமையா
னிரவுறு துயரத்திற் கிரங்கி யுரைத்த
லிகழ்ச்சி நினைந்தழித
லுருவுவெளிப் படுத
னெஞ்சொடு நோதனெஞ்சொடு புலத்த
னெஞ்சொடு மறுத்த னாளெண்ணி வருந்த
லேறு வரவுகண் டிரங்கி யுரைத்தல்
பருவங்கண் டிரங்கன் முகிலொடு கூற
றேர் வரவு கூற லிளையரெதிர் கோட
லுண்மகிழ்ந் துரைத்த லோதிய
விருபதும்
மாமதி நுதலாய் வான்பொருட் பிரிதல்.
_____________________________________________________________
பொருள் வயிற்பிரிவு -
இதன் பொருள்: வாட்டங்கூறல்,
பிரிவுநினை வுரைத்தல், ஆற்றாதுபுலம்பல், ஆற்றாமைகூறல், திணைபெயர்த்துரைத்தல், பொருந்தமறிந்துரைத்தல்,
பிரிந்தமைகூறல், இரவுறு துயரத்திற்கிரங்கியுரைத்தல், இகழ்ச்சிநினைந்தழிதல், உருவுவெளிப் பட்டு
நிற்றல், நெஞ்சொடுநோதல், நெஞ்சொடுபுலத்தல், நெஞ்சொடு மறுத்தல், நாளெண்ணிவருந்தல்,
ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல், பருவங்கண்டிரங்கல், முகிலொடுகூறல், தேர்வரவுகூறல், இளைய ரெதிர்கோடல்,
உண்மகிழ்ந்துரைத்தல் என விவை இருபதும் பொருள் வயிற் பிரிவாம் எ-று. அவற்றுள்-
|