பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
545

24

பொருள் வயிற் பிரிவு

24.1 வாட்டங்கூறல்

   
வாட்டங்கூறல் என்பது பொருள்வயிற் பிரியலுறாநின்ற தலைமகன், இருமையும் பொருளானே முற்றுப்பெறுமென்று யான் பொதுவகையாற்கூற, அக்குறிப்பறிந்து கண்பனிவர, இத்தன்மையளாய் வாடினாள்; இனி யென்னாற் பிரிவுரைத்தலரிது; நீ யுணர்த்து மாற்றானுணர்த்தெனத் தோழிக்குத் தலைமகளது வாட்டங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்-

332. முனிவரும் மன்னரும் முன்னுவ
        பொன்னான் முடியுமெனப்
    பனிவருங் கண்பர மன்திருச்
        சிற்றம் பலமனையாய்
    துனிவரு நீர்மையி தென்னென்று
        தூநீர் தெளித்தளிப்ப
    நனிவரு நாளிது வோவென்று
        வந்திக்கும் நன்னுதலே.

332

__________________________________________________

24.1.  பிரிவு கேட்ட வரிவை வாட்டம்
      நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது.

   
இதன் பொருள்: முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என - துறந்தாரு மரசரும் கருதுவனவாகிய மறுமையு மிம்மையும் பொருளான் முற்றுப்பெறுமென்று பொது வகையாற் கூற, கண் பனி வரும்-அக்குறிப்பறிந்து கண்கள் பனிவாரா நின்றன, இவ்வாறு, பனிவருங்கண்ணோடு அறிவழிந்து வருந்திய விடத்து; பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய்-பரமனது திருச்சிற்றம்பலத்தை யொப்பாய்; துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப - நீ துன்பம் வருந்தன்மை இஃதென்ன காரணத்தான் வந்தது யான்பிரியேனென்று தூய நீரைத் தெளித்துத் தலையளிசெய்ய அறிவு பெற்று அறிவழிந்த காலத்தைப் பிரிந்த காலமாகவே கருதி; நனி வரும் நாள் இதுவோ என்று நன்னுதல் வந்திக்கும் - நீர் நனிதாழ்த்து வருநாளிதுவோவென்று நன்னுதலாள் வணங்கி நின்றாள்; இனி நீயுணர்த்துமாற்றானுணர்த்து எ-று.

    பரமன் றிருச்சிற்றம்பலமனையா ளென்று பாடமோதுவாருமுளர். நீயெனவுந் தாழ்த்தெனவு மொருசொல் வருவித்துரைக்கப்