பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
546

24

பொருள் வயிற் பிரிவு

24.2 பிரிவுநினைவுரைத்தல்

   
பிரிவுநினைவுரைத்தல் என்பது வாட்டங் கேட்ட தோழி, பொருளில்லாதார் இருமையின் கண்வரு மின்பமும் அறியாரெனவுட்கொண்டு, அருஞ்சுரம்போய், நமர் பொருடேட நினையாநின்றா ரெனத் தலைமகளுக்குத் தலைமகனது பிரிவுநினை வுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

333. வறியா ரிருமை யறியா
        ரெனமன்னும் மாநிதிக்கு
    நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
        றார்நமர் நீண்டிருவர்
    அறியா வளவுநின் றோன் தில்லைச்
        சிற்றம் பலமனைய
    செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
        செவ்வாய்த் திருநுதலே.

333

____________________________________________________________

பட்டது. நனிவந்திக்குமெனினுமமையும். துறந்தார் கருதுவதாகிய மறுமையின்பமும், அரசர் கருதுவதாகிய விம்மையின்பமு மென்று, நிரனிறையாகக் கொண்டு, அவரிருவருங் கருதுவனவாகிய இப்பொருளிரண்டையும் பொருண்முடிக்குமென்று பொது வகையாற் கூறினானெனக் கொள்க மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல்.

332

24.2.  பொருள்வயிற் பிரியும் பொருவே லவனெனச்
      சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.


   
இதன் பொருள்: இருவர் அறியா அளவு நீண்டு நின்றோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய - மாலும் பிரமனுமாகிய விருவர் அடியும் முடியும் அறியாத எல்லையின்கண் நீண்டு நின்றவனது திருச்சிற்றம்பலத்தையொக்கும்; செறி வார் கருங் குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதல் - செறிந்த நீண்டகரியகுழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்யவாயினையுமுடைய திரு நுதால்; வறியார் - பொருளில்லாதார்; இருமை அறியார் என - இம்மையு மறுமையுமாகிய இருமையின்கண்வரும் இன்பமு மறியா ரென்று கருதி; மன்னும் மா நிதிக்கு - தொலையாது நிலைபெறும் பெரிய வரும் பொருடேடுதற்கு; நெறி ஆர் அரும் சுரம் நமர் செல்லல் உற்றார்-