24
பொருள் வயிற்
பிரிவு
24.3 ஆற்றாது புலம்பல்
ஆற்றாது புலம்பல் என்பது
பிரிவுநினைவுரைப்பக்கேட்ட தலைமகள், இத்தோழியாகிய கொடியவள், இத்தன்மையை யறிந்திருந்தும்,
அன்பர் பிரிவரெனக் குவளைப்பூ வெறிதற்கு வாளுறைகழித்தாற்போலக் கூறினாள்; இதற்கியான் கூறுவதுண்டோ
வென ஆற்றாது புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்-
334. சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
றம்ம கொடியவளே.
334
_______________________________________________________________
வழியறிதற்கரிய அருஞ்சுரத்தை நமர்
போகலுற்றார் எ-று.
செறியா ரென்பதூஉம் பாடம். சிறுகானெறி
பலவாகிய வருஞ்சுர மெனினுமமையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுடம்படுத்தல்.
333
24.3. பொருள்தரப் பிரியும்
அருள்தரு பவனெனப்
பாங்கி பகரப் பூங்கொடி
புலம்பியது.
இதன் பொருள்: தோழி
கொடியவள் - தோழியாகிய கொடியவள்; அஞ்சனம் எழுதிற் கரப்பதற்கே ஒழிகுவது அறிவாள் - அஞ்சன
மெழுதின் எழுதுகின்ற கால மத்துணையுங் காதலர் தோன்றாமையான் அவ்வஞ்சனத்தை யொழிவதறிவாள்;
அம்பலவர்ப் பணியார் குறி வாழ் நெறி அன்பர் செல்வர் என்று - அம்பலவரை வணங்காதார் அவ்வணங்காமைக்குக்
குறியாக வாழுந் தீயநெறியை அன்பர் செல்வரென்று; வாள்சிறு உகிர் உற்று உறாமுன்னம் சின்னப்படும்
குவளைக்கு - ஒளியையுடைய சிறியவுகிர் சிறிதுறாமுன்னம் பொடிபடுங் குவளைப் பூவிற்கு; எறிவாள் கழித்தனள்
- எறிதற்குக் கருவியாகிய வாளையுறைகழித்தாள்; யான்கூறுவதுண்டோ! எ-று.
|