பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
548

24

பொருள் வயிற் பிரிவு

24.4 ஆற்றாமைகூறல்

   
ஆற்றாமைகூறல் என்பது தலைமகளது வருத்தங்கண்ட தோழி, காதலர் கானகத்தையுடைய சுரத்தைப் போய்ப் பொருடேட நினையாநின்றாரென்றுயான் சொல்லுமளவில், அவளது முலையுங் கண்ணும் பொன்னும் முத்துந் தாராநின்றன; இனி நீ சேட்சென்று தேடும் பொருள் யாதோவெனத் தோழி தலைமகனுக்கு அவளது பிரிவாற்றாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

335. வானக்கடிமதில் தில்லையெங்
        கூத்தனை ஏத்தலர் போற்
    கானக் கடஞ்செல்வர் காதல
        ரென்னக் கதிர்முலைகள்
    மானக் கனகந் தருமலர்க்
        கண்கள்முத் தம்வளர்க்குந்
    தேனக்க தார்மன்ன னென்னோ
        இனிச்சென்று தேர்பொருளே.

335

கொடியவரே யென்பது பாடமாயிற் கொடியராகிய வன்பரெனக் கூட்டுக. அம்ம: அசைநிலை. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செல வழுங்குவித்தல்.

334

24.4.  ஏழை யழுங்கத்
      தோழி சொல்லியது.

   
இதன் பொருள்: வானக் கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் - முகில்களையுடைத்தாகிய காவலையுடைய மதிலாற் சூழப்பட்ட தில்லையில் எங்கூத்தனை வாழ்த்தாதார் போல; காதலர் கானக் கடம் செல்வர் என்ன - காதலர் கானகத்தையுடைய சுரத்தைச் செல்வரென்று சொல்ல; கதிர் முலைகள் மானக் கனகம் தரும் - ஒளியையுடைய முலைகள் கொண்டாடப்படும் பொன்னைத்தாராநின்றன; மலர்க் கண்கள் முத்தம் வளர்க்கும் - மலர் போன்ற கண்கள் முத்தத்தைப் பெருக உண்டாக்கா நின்றன; அதனான், தேன் நக்க தார் மன்னன் - தேனோடு மலர்ந்த தாரையுடைய மன்னன்; இனிச் சென்றுதேர் பொருள் என் - இனிச் சேட்சென்று தேடும் பொருள் யாது! எ-று.

   
மானமென்றது அளவை. அளவையென்றது பிரமாணம். மாற்றாணிப்பொன்னென்றுரைப்பினு மமையும். மன்னனென்பது