பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
549

24

பொருள் வயிற் பிரிவு

24.5 திணைபெயர்த்துரைத்தல்

   
திணை பெயர்த்துரைத்தல் என்பது யான் அவர்க்கு நினதாற்றாமை கூறினேன், இனியவர் நினைவறியேனென்ற தோழிக்கு, தாம் எனக்கருளைப் புலப்படுத்திய சொற்களத் தனையு மறந்தோ காவலர் தீவினையேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்ற தெனப் பிரிவுள்ளிப் பாலைநிலத்தனாகிய தலைமகனை மருதநிலத்தனாக்கித் தலைமகள் புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

336. சுருடரு செஞ்சடை வெண்சுட
        ரம்பல வன்மலயத்
    திருடரு பூம்பொழில் இன்னுயிர்
        போலக் கலந்திசைத்த
    அருடரு மின்சொற்க ளத்தனை
        யும்மறந் தத்தஞ்சென்றோ
    பொருடரக் கிற்கின் றதுவினை
        யேற்குப் புரவலரே.

336

______________________________________________________________

ஈண்டு முன்னிலைக்கண் வந்தது; இயல்புவிளி யென்பாருமுளர். மெய்ப்பாடு; இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்; அது.

335

24.5.  துணைவன் பிரியத் துயருறு மனத்தொடு
      திணைபெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது.

    இதன் பொருள்: சுருள் தரு செஞ்சடைவெண் சுடர் அம்பலவன் மலயத்து - சுருண்ட செஞ்சடைக்கணணிந்த வெண்சுடரை யுடைத்தாகிய மதியையுடைய வம்பலவனது பொதியின் மலைக்கண்; இருள் தரு பூம் பொழில் - இருண்ட பூவையுடைய பொழிலிடத்து; இன் உயிர் போலக் கலந்து - இன்னுயிர்போல இனியராய் ஒன்றுபட்டு வந்து கூடி; இசைத்த அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து - நமக்குச் சொன்ன அருளைப் புலப்படுத்தும் இனிய சொற்கள் எல்லாவற்றையும் மறந்து; அத்தம் சென்றோ - தாம் அருஞ்சுரஞ் சென்றோ; புரவலர் - காவலர்; வினையேற்குப் பொருள் தரக்கிற் கின்றது - தீவினை யேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்றது! இது தகுமோ! எ-று.