24
பொருள் வயிற்
பிரிவு
24.6 பொருத்த மறிந்துரைத்தல்
பொருத்தமறிந்துரைத்தல் என்பது திணைபெயர்த்துக்
கூறின தலைமகளுக்கு, யாமெல்லாஞ் சொன்னேமாயினுங் காதலர்க்கு நினைவு பொருண்மேலேயாயிருந்தது;
இனி யாஞ் சொல்லுவ தென்னோவெனத் தோழி தலைமகனது பொருத்த மறிந்து, தானதற்கு நொந்து கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்.
337. மூவர்நின் றேத்த முதலவன்
ஆடமுப்பத்து மும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன்
தில்லை
யம்பலஞ் சீர்வழுத்தாப்
________________________________________________
இருளைத்தருமென் றுரைப்பினு மமையும்.
உடம் போடுயிர் கலக்குமாறு போலக் கலந்தெனினு மமையும். திணை பெயர்த்திடுதல் - பிரிவுள்ளிப்
பாலைநிலத்தனாகியானை மருதநிலத்த னாக்குதல். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்குவித்தல்.
336
24.6. பொருள்வயிற்
பிரிவோன் பொருத்த நினைந்து
சுருளுறு குழலிக்குத் தோழி
சொல்லியது.
இதன் பொருள்: மூவர் நின்று
ஏத்த - நான்முகனும் மாலும் இந்திரனுமாகிய மூவர்நின்றுபரவ; முதலவன் ஆட - எல்லாப் பொருட்குங்
காரணமாகியவ னாடாநிற்ப; முப்பத்து மும்மைத் தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லையம்பலம் சீர்
வழுத்தா - முப்பத்து மும்மையாகிய எண்ணையுடைய தேவர்கள் சென்று வழுத்துஞ் சிவனது தில்லையம்பலத்தை
நன்மைபுகழாத; பாவர் சென்று அல்கும் நரகம் அனைய - தீவினையார் சென்று தங்கு நகரத்தையொக்கும்;
புனை அழல் கான் போவார் நம் காதலர் - செய்தாற்போலு மழலையுடைய காட்டைப் போவர்
போன்றிருந்தார் நங்காதலர்; பூங்கொடி - பூங்கொடி போல்வாய்; நாம் உரைப்பது என் - இனி நாஞ்சொல்லுவதுண்டோ! எ-று.
முப்பத்துமும்மை - முப்பத்து
மூவரது தொகுதியெனினு மமையும். சீர்வழுத்தா வென்பன ஒருசொன் னீர்மைப்பட்டு அம்பலத்தையென்னு
மிரண்டாவதற்கு முடிபாயின. பொருத்தம் - உள்ளத்து நிகழ்ச்சி. சொல்லாது பொருள்வயிற்
பிரிவோன் கருத்தறிந்து தோழி சொல்லியது. மெய்ப்பாடும், பயனும் அவை.
337
|