பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
551

பொருள் வயிற் பிரிவு

    பாவர்சென் றல்கும் நரக
        மனைய புனையழற்கான்
     போவர்நங் காதல ரென்நாம்
        உரைப்பது பூங்கொடியே.

337

24.7 பிரிந்தமைகூறல்

   
பிரிந்தமை கூறல் என்பது பொதுவகையானுணர்த்தினே மாயின், இனித்தீயது பிற காண்கின்றோமெனத் தலைமகனுணர்த்தாது பிரியாநிற்ப, நின்முன்னின்று பிரிவுணர்த்தினால் நீ மேனியொளி வாடுவையென வுட்கொண்டு, பொருண்முடித்துக் கடிதின் மீள்வாராக நால்வகைத்தானையோடு நம்மன்னர் வினைவயிற்சென்றாரெனத் தோழி, தலைமகளுக்குத் தலைமகன் பிரிந்தமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

338. தென்மாத் திசைவசை தீர்தரத்
        தில்லைச்சிற் றம்பலத்துள்
    என்மாத் தலைக்கழல் வைத்தெரி
        யாடும் இறைதிகழும்

___________________________________________________________

24.7.  எதிர்நின்று பிரியிற் கதிர்நீ வாடுதற்
      குணர்த்தா தகன்றான் மணித்தேரோ னென்றது.


   
இதன் பொருள்: தென் மாத் திசை வசை தீர்தர - தெற்காகிய பெரிய திசை குற்றநீங்க; என்மாத் தலைக் கழல் வைத்து - எனது கருந்தலைக்கட் கழல்களை வைத்து; தில்லைச் சிற்றம்பலத்து - தில்லைச் சிற்றம்பலத்தின்கண்; எரி ஆடும் இறை திகழும் பொன் மாப்புரிசைப் பொழில் திருப் பூவணம் அன்ன பொன்னே - எரியோடாடு மிறைவனது விளங்கும் பொன்னானியன்ற பெரியமதிலாற் சூழப்பட்ட பொழிலையுடைய திருப் பூவணத்தை யொக்கும் பொன்னே; நம் மன்னவர் வன் மாக்களிற்றொடு இன்று சென்றனர்-நம்மன்னர் வலிய பெரிய களிறுகளோடும் வினைகுறித்து இன்று சென்றார் எ-று.

   
நால்வகைத்தானையோடுஞ் சென்றா ரெனினு மமையும்.. மதிற்கால்சாய்த்தற்குக் களிறு சிறந்தமையின் அதனையே கூறினார். வினைவயிற்பிரிவுழிக் களிற்றுத்தானை சிறந்தமையின், ஒடு; உயர் பின்வழி வந்ததாம்; வேறுவினை யொடுவாய்க் களிற்றையுடை