ஏழ
பொருள் வயிற்
பிரிவு
ஏழியன் றாழ்கட லும்மெண்
டிசையுந் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
தேர்வந்து வைகுவதே.
339
24.9 இகழ்ச்சி நினைந்தழிதல்
இகழ்ச்சி நினைந்தழிதல் என்பது
தோழி இரக்கமுற்றுக் கூறாநிற்ப, முற்காலத்து அவருலகின் மேல்வைத் துணர்த்தியவழி நீட்டித்துப்
பிரிவாராயினும், இப்பொழுதைக்கிவர் பிரியாரென யான் அவர் பிரிவிகழ்ந்திருந்தேன்;
முன்னின்று பிரிவுணர்த்தின் இவளுயிர் தரியாளென்று அவருணர்த்துதலை யிகழ்ந்து போனார்; அத்தன்மைய
வாகிய இரண்டிகழ்ச்சியும், என்னை யித்தன்மைத்தாக வழிவியா நின்றனவெனத் தலைமகள் இகழ்ச்சிநினைந்
தழியா நிற்றல். அதற்குச் செய்யுள்-
340. பிரியாரென இகழ்ந்தேன்
முன்னம்
யான்பின்னை எற்பிரியின்
தரியா ளென இகழ்ந் தார்மன்னர்
தாந்தக்கன்
வேள்விமிக்க
___________________________________________________________
இவளாற்றுதல் யாண்டையது! எ-று.
ஈரடியுமென்பதனை எழுவாயாக்கினு
மமையும். நான்குந் திரிந்தெனவியையும். இயன்றவென்பது கடைக்குறைந்து நின்றது. வாழி-அசைநிலை.
ஒன்றாதன வென்பதனை நான்கு மென்னு மெழுவாய்க்குப் பயனிலையாக்கி யுரைப்பினுமமையும். ஐம்பூதமும்
ஆறுகளொடுங்கும் ஏழ்கடலுமென்றெண்ணிக் கடலோ டருக்கற்கியை புண்மையான், ஐம்பூதத்திற் பிரித்துக்
கூறினாரென்பாருமுளர். இரவும்பகலு மொப்பவருமாயினும் இரவுறுதுயரத்திற் காற்றாமை யான், இராப்பொழுது
பலகால் வருவதுபோலப் பயிறருமிரவென்றாள். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்குவித்தல்.
339
24.9. உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ்குழலி வாடியது.
இதன் பொருள்: முன்னம்
பிரியார் என யான் இகழ்ந்தேன்-
|