எர
பொருள் வயிற்
பிரிவு
எரியா ரெழிலழிக் கும்மெழி
லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன
என்னை யழிவித்தவே.
340
______________________________________________________________
முற்காலத்து அவருலகின் மேல்வைத்துக்
கூறியவழி நீட்டித்துப் பிரிவராயி்னும் இப்பொழுது பிரியாரென யானிகழ்ந்திருந்தேன்; எற்பிரியின்
தரியாள் என மன்னர் தாம் பின்னை இகழ்ந்தார் - என்னைத் தாம் பிரிகின்றாராக வுணரின்
இவளுயிர் தாங்காளென மன்னர் தாம் பின்னுணர்த்துதலை யிகழ்ந்தார்; அன்ன - அத்தமையவாகிய
இரண்டிகழ்ச்சியும்; தக்கன் வேள்வி எரி ஆர் மிக்க எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் -
தக்கனது வேள்வியின் முத்தீ நிறைந்த மிக்கவழகையழித்த எழிலையுடைய அம்பலத்தான்; எவர்க்கும்
அரியான் - யாவர்க்குமரியவன்; அருள் இலர் போல் என்னை அழிவித்த - அவனதருளில்லாதாரைப்
போல வருந்த என்னை யழிவித்தன எ-று.
உண்மையாற் காரணமாவனவும்,
உணரப்பட்டாற் காரணமாவனவும் எனக் காரணமிருதிறத்தன. அவற்றுட் பிரிவு தரியாமைக்கு உணரப்பட்டாற்
காரணமாமாகலின் பிரியினென்புழிப் பிரிகின்றாராக வுணரினென்பது ஆற்றலாற் பெற்றாம், புலிவரினஞ்சு
மென்புழிப் போல. எரியாரெழிலழிக்குமென்பதற்கு எரியின தெழிலழிக்கு மென்பார், ஆரைக்கிளவிகொடுத்
திழித்துக் கூறினாரெனினுமமையும. அழிக்குமென்பது காலமயக்கம். கற்பந்தோறும் அவ்வாறு செய்தலின்
நிகழ்காலத்தாற் கூறினாரெனினுமையும். உணர்த்தாது பிரியினும் ஒருவாற்றானுணர்ந்து பின்னுமாற்றா
ளாவளாலெனின், தீயதுபிற காணப்படுமென்பதாகலானும், முன்னின் றுணர்த்தல் வல்லனல்லாமையானும் அவ்வாறு
பிரியுமென்க. மெய்ப்பாடு: அது. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
340
|