என
உரைமாட்சி
என்றும், 272ஆம் பாடலுரையில் திருந்தும்
கடனெறி என்பது தித்திக்கும் தேன் என்பது போல இத்தன்மைத்து என்னும் நிகழ்காலம்பட நின்றது
என்றும் உவமைகளை ஆண்டுள்ளமை காண்க.
பிறருரை மறுத்தல் :
பிறருரைகளை, என்றுரைப்பாருமுளர்
என்று கூறிப்பேரளவு எடுத்துக்காட்டும் இயல்பினர் இவ்வுரையாசிரியர். ஆனால், பிறருரை பொருத்தம்
அற்றதாயின், தக்க காரணங்களைக் கூறி அதனை மறுத்தலும் செய்வார்.
86ஆம் பாடலுரையில், இதனைத் தோழி
கூற்றாக உரைப்பாரும் உளர்; இவையிவை என்னும் அடுக்கானும், இனி ‘உள்ளப்படுவன உள்ளி’ எனத்
தலைமகளோடு புலந்து கூறுகின்றமை யானும், இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தமுடைத்தென்பதறிக
என்று தோழி கூற்றென்பாரை மறுத்தமை காண்க.
ஐயமகற்றல்:
கற்பார்க்கு இன்னின்ன இடங்களில்
என்னென்ன ஐயங்கள் இயல்பாக எழும் என்பதனை உய்த்துணர்ந்து அவ்வவற்றைக்களையும் வண்ணம் வேண்டிய
விளக்கங்களை ஆங்காங்கு வரைந்துதவும் இயல்பினர் இவ்வுரையாசிரியர்.
102ஆம் பாடலில் ‘மைத்தழையா நின்ற
மாமிடறு’ என்ற தொடரில் இயல்பாக எழும் கூறியது கூறல் என்னும் ஐயத்தை, ‘மாகருமை. மாமிடறு என்பது
பண்புத் தொகையாய் இன்னது. இது என்னும் துணையாய் நிற்றலானும், மைத்தழையா நின்ற என்பது அக்கருமையது
மிகுதியை உணர்த்தி நிற்றலானும் கூறியது கூறலாகாமை அறிக’ என்று கூறி அகற்றியமை காண்க.
124ஆம் பாடலில் தாரகைமுகை
ஆயம், மதிக்கமலத் தலைவி என்பன அடுக்கிவரலுமை ஆகுங்கொல் என்னும் ஐயத்தை, முகையொடு தாரகைக்கு
ஒத்த பண்பு வெண்மையும் வடிவும் பண்பும். தாரகையோடாயத்தார்க்கு ஒத்த பண்பு பன்மையும் ஒன்றற்குச்
சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும், கமலத்தோடு மதிக்கு ஒத்த பண்பு வெண்மையும் வடிவும்
பொலிவும். மதியோடு தலைமகட்கு ஒத்த பண்பு, கட்கு இனிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப்
பொலிதலும். இவ்வாறு ஒத்த பண்பு வேறுபடுதலான் உவமைக்கு உவமை ஆகாமை அறிந்து கொள்க என்று கூறிக்
களைந்தவாறு காண்க.
|