24
பொருள் வயிற்
பிரிவு
24.17 முகிலொடு கூறல்
முகிலொடு கூறல் என்பது பருவங்கண்டிரங்கி
விரைவோடு வாராநின்ற தலைமகன், இவ்விடத்தெல்லாம் முற்பட்டாயாயினும் முதுபெண்டீர் திரண்டு அவளின்னாமையை
நீக்கற்கு இல்லுறை கடவுட்குப் பூசனைசெய்யாநிற்கும் நீணகரத்திற்கு என்னின் முற்படாதொழிவாயாகவென,
முந்துற்றுச் செல்லாநின்ற முகிலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
348. அற்படு காட்டில்நின்
றாடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன்
னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
ராநிற்கும் நீள்நகர்க்கே.
348
______________________________________________________________
24.17. எனைப்பல துயரமோ டேகா
நின்றவன்
துனைக்கா ரதற்குத் துணிந்துசொல்
லியது.
இதன் பொருள்: அல் படு
காட்டில் நின்று ஆடி - மாலைக் காலத்து இருளுண்டாகா நின்ற புறங்காட்டின்கண் நின்றாடுவான்;
சிற்றம்பலத்தான்-சிற்றம்பலத்தின்கண்ணான்; மிடற்றின் முற்படு நீள் முகில் - அவனது மிடறுபோல
விருண்டு முற்படாநின்ற நீண்ட முகிலே; முதுவோர் குழுமி-இவ்விடத்தெல்லாம் முற்பட்டாயாயினும்,
முதுபெண்டீர் திரண்டு; வில்படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் - விற்றாழுமொளிநுதலாளது இன்னாமையை
நீக்கவேண்டி; விரை மலர் தூய் - நறுநாற்றத்தையுடை மலர்களைத்தூவி; நெல் படு வான் பலி செய்து
அயரா நிற்கும் நீள் நகர்க்கு-நெல் விரவிய தூய பலியைக் கொடுத்து இல்லுறைகடவுட்குப் பூசனைசெய்யாநிற்கும்
பெரிய வில்லத்திற்கு; என்னின் முன்னேல் - என்னின் முற்படாதொழி எ-று.
வான்பலிசெய் தயராநிற்கு மென்பதற்குப்
பலிகொடுத்து விரிச்சி யயராநிற்குமெனினுமமையும். ஆடுசிற்றம்பலவனென்ப தூஉம் பாடம். துனைக்கார்
- விரைவையுடைய கார். துணைக்கா
|