பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
563

24

பொருள் வயிற் பிரிவு

24.18 தேர்வரவு கூறல்

   
தேர்வரவு கூறல் என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகன் முகிலொடுவந்து புகாநிற்ப, இம்முகில் இவளதாவியை வெகுளா நின்ற காலத்து ஒரு தேர்வந்து காத்தமையான் இனிவரக் கடவதனை வெல்லுமாறில்லையெனத் தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

349. பாவியை வெல்லும் பரிசில்லை
        யேமுகில் பாவையஞ்சீர்
    ஆவியை வெல்லக் கறுக்கின்ற
        போழ்தத்தி னம்பலத்துக்
    காவியை வெல்லும் மிடற்றோ
        னருளிற் கதுமெனப்போய்
    மேவிய மாநிதி யோடன்பர்
        தேர்வந்து மேவினதே.

349

_____________________________________________________________

ரென்பது பாடமாயின், இனத்தையுடைய முகிலென்றுரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: பாகன்றேரை விரையக் கடாவுதல்.

348

24.18.  வேந்தன் பொருளொடு விரும்பி வருமென
      ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.


   
இதன் பொருள்: முகில் பாவை அம் சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற பேழ்தத்தின் - முகில் பாவையதழகிய சீர்மையையுடைய வுயிரைச் செகுப்பான் கறாநின்ற பொழுதின்கண்; அம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் - அம்பலத்தின்கணுளனாகிய நீலப்பூவைவெல்லு மிடற்றையுடையவனதருள் போல; போய் மேவிய மாநிதி யோடு -போய்த்தேடிய பெரு நிதியோடு; அன்பர் தேர் கதுமென வந்து மேவினது -அன்பர் தேர் கதுமென வந்து பொருந்திற்று, அதனால், பாவியை வெல்லும் பரிசு இல்லையே - வரக்கடவதனை வெல்லுமாறில்லையே போலும் எ-று.

   
இனி ஒருவாற்றானும் இவளுயிர் வாழ்த லரிதென்றிருந்தனம் இதுபாவியாதலின் இற்றைப்பொழுதிகவாது தேர் வந்த தென்னுங் கருத்தாற் பாவியைவெல்லும் பரிசில்லையே யென்றாள். தமியரை