24
பொருள் வயிற்
பிரிவு
24.19 இளையரெதிர் கோடல்
இளையரெதிர்கோடல் என்பது தோழி
தலைமகட்குத் தேர்வரவு கூறாநிற்ப, இந்நிலைமைக்கண், இவளாவிசெல்வதற்கு முன்னே, சூழுந்தொகுநிதியோடு
அன்பர் தேர்வந்து தோன்றிற்று; இனி யூழின்வலியது வேறொன்றுமில்லையெனப் பொருண் முடித்து வாராநின்ற
தலைமகனைச் சென்று இளையர் எதிர் கொள்ளாநிற்றல். அதற்குச் செய்யுள்-
360. யாழின் மொழிமங்கை
பங்கன்சிற்
றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
தேர்வந்து தோன்றியதே.
350
_____________________________________________________________
அற்றம்
பார்த்து வெல்லக்கருதிச் சிலர் வெகுள்கின்ற காலத்து அத்தமியார்க்குத் துணையாயதொருதேர்வந்து
காத்ததென வேறுமொரு பொருள் விளங்கினவாறறிக. அருளின் மேவினதென வியையும். அருளான்வந்து மேவிற்றெனினுமமையும்.
மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஆற்றுவித்தல்.
349
24.19. செறிக ழலவன் திருநகர்
புகுதர
எறிவேல் இளைஞர் எதிர் கொண்டது.
இதன் பொருள்: ஒளி
மேகலை உகளும் - ஒளியையுடைய மேகலை தன்னிலையினின்றும் போகாநின்றது; வரி வளை வீழும் - வரியையுடைய
வளைகள் கழன்று வீழாநின்றன; மெல்லியல் ஆவி செல்லாத முன்னே -இந்நிலைமைக்கண் மெல்லிய
லுயிர் செல்வதற்கு முன்னே; சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியது -
சூழ்ந்துவருந் திரண்டநிதியோடு
அன்பரது தேர் வந்து தோன்றிற்று,
அதனான், யாழின்
மொழி மங்கை பங்கன் - யாழோசைபோலு மினிய மொழியையுடைய மங்கையது கூற்றை யுடையான்; சிற்றம்பலத்தான்
- சிற்றம்பலத்தின்கண்ணான்; அமைத்த ஊழின் வலியது ஒன்று
|