| 24 
பொருள் வயிற்
பிரிவு 
24.20 உண்மகிழ்ந்துரைத்தல்
 உண்மகிழ்ந்துரைத்தல் என்பது
பொருண்முடித்து இளைஞரெதிர் கொள்ளவந்து புகுந்து தலைமகன், தலைமகளுடன் பள்ளியிடத்தனாயிருந்து,
இம்மானைப்பிரிந்து பொருள்தேட யான் வெய்ய சுரஞ்சென்ற துன்பமெல்லாம் இவள் கொங்கைகள் என்னுறுப்புக்
களிடை மூழ்க இப்பூவணைமே லணையாமுன்னம் துவள்வுற்றதெனத்தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
 
351. மயின்மன்னு சாயலிம்
மானைப்பிரிந்து பொருள்வளர்ப்பான்
 வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
 லாம்விடை யோன்புலியூர்க்
 
____________________________________________________________ 
என்னை - அவனாலமைக்கப்பட்ட ஊழின்
வலியதொன்றியாது! எ-று.
 மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்.
 
350 
24.20.  பெருநிதி யோடு திருமனை
புகுந்தவன்வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந்
துரைத்தது.
 
 இதன் பொருள்: மயில்
மன்னு சாயல் இம்மானைப் பிரிந்து -மயில்போலு மென்மையையுடைய இம்மானைப் பிரிந்து; பொருள்
வளர்ப்பான் வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றது எல்லாம் - பொருளை யீட்டுவான் வெயினிலைபெற்ற
வெய்யசுரத்தைச் சென்ற துன்ப மெல்லாம்; விடையோன் புலியூர் குயில் மன்னு சொல்லி மென்
கொங்கை - விடையையுடையவனது புலியூரிடத்துளவாகிய குயிலோசைபோலுஞ் சொல்லையுடையாளுடைய மெல்லிய
கொங்கைகள்; என் அங்கத் திடைக் குளிப்ப - என்னுறுப்புக்களிடை மூழ்கும் வகை; துயில் மன்னு பூ
அணைமேல் அணையாமுன் துவளுற்றது - துயினிலைபெறும் பூவணையிடத் தணைவதன்முன்னம் மாய்ந்தது எ-று.
 |