ச
பரத்தையிற்
பிரிவு
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
தொடல்விடு நற்கலையே.
358
_____________________________________________________________
முத்தன்
- இயல்பாகவே பாசங்களி னீங்கியவன்; சிவன் - எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற்
சிவன்; செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர - அவனாற்செய்யப்பட்ட சீரிய வருணிறைந்த தில்லையிலூரனே;
தவம் செய்திலாத வெம் தீவினையேம் - முற்காலத்துத் தவத்தைச்செய்யாத வெய்ய தீவினையையுடையயாம்;
புன்மைத் தன்மைக்கு எள்ளாது-நின்னாலாதரிக்கப்படாத எமது புன்மைத் தன்மைகாரணமாக எம்மையே யிகழாது;
எவம் செய்து நின்று இன்று இனி உனை நோவது என் - நினக்குத் துன்பத்தைச் செய்யாநின்று இப்பொழுது
இனி நின்னை நோதலென்னாம்! அது கிடக்க; நின் சேயிழையார் நவம் செய்த புல்லங்கள் மாட்டேம்
- நின்னுடைய சேயிழையார் நினக்குப் புதிதாகச் செய்த புல்லுதல்களை யாமாட்டோம், அதனால், நற்கலை
தொடல் - எமது நல்ல மேகலையைத் தொடாதொழி; விடு - விடுவாயாக எ-று.
எவ்வம் எவமென நின்றது. காதலில்லை யாயினுங் கண்ணோட்ட முடைமையான் இகழ்ந்து வாளாவிருப்பமாட்டாமையின்,
எம்புலவியான் நினக்குத் துன்பமாந்துணையே யுள்ள தென்னுங் கருத்தான், எவஞ்செய்து நின்றென்றாள்.
இனி யென்பது நீயிவ்வாறாயினபின் னென்னும் பொருட்டாய் நின்றது. சிவன்செய்த சீரருளார் தில்லையூர
வென்றதனான், நின்னாற் காயப்பட்டாரானுங் மென்றதனான், எம்மாற் காதலிக்கப்பட்டாரானுங்காதலிக்கப்படா
நின்றா யெனவும், தவன்செய்திலாதவெந்தீவினையே காயப்படா நின்றேமெனவுங் கூறியவாறாம். புல்லென்பது
புல்லமென விரிந்து நின்றது. புல்லமென்பதனைப் புன்மையென்று நின்சேயிழையார் புதிதாகச் செய்த
குறிகளைப் பொறுக்கமாட்டே மென்றுரைப்பினுமமையும். எவன்செய்து நின்றெனப் பாடமோதி, தவஞ் செய்திலா
வெந் தீவினையேம் இன்றுன்னை நோவது என்செய்து நின்றென்றும் என்னத்தனென்று முரைப்பாருமுளர். எள்கா
தென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புணர்தல்.
358
|