25
பரத்தையிற்
பிரிவு
25.8 செவ்வணிவிடுக்கவில்லோர்
கூறல்
செவ்வணிவிடுக்கவில்லோர் கூறல்
என்பது இக்கொங்கைகள் தாங்கித் தளராநின்ற மருங்குலையுடைய இவள் வருந்த, இவ்வாயத்தார்
முன்னே, அப்பரத்தையர் மனைக்கண் இப்பேதை இக்குறியறிவிக்கச் செல்லாநின்ற விது நமக்கு
மிகவுமிளிவரவுடைத் தெனச் செவ்வணிவிடுக்க விரையாநின்ற வில்லோர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
359. தணியுறப் பொங்குமிக்
கொங்கைகள்
தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென்
றின்றெய்து
மால்அர வும்பிறையும்
_____________________________________________________________
25.8. பாற்செலு மொழியார் மேற்செல
விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர்
புகன்றது.
இதன் பொருள்: அரவும்
பிறையும் அணியுறக் கொண்டவன் தில்லை-பிறைக்குப் பகையாகிய அரவையும் பிறையையும் அழகுறத் தனக்கணியாகக்
கொண்டவனது தில்லையின்; தொல் ஆயம் நல்லார்கள் முன்னே - பழைய இவளாயத்தி னுள்ளாராகிய நல்லார்
கண் முன்னே; பணி உறத் தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில்மனைக்கு - அரவுபோலத் தோன்று நுடங்குமிடையை
யுடையார்கள் நெருங்கும் பரத்தையர் மனைக்கண்; தணி உறப் பொங்கும் இக்கொங்கைகள் தாங்கி -
தணிதலுறும் வண்ணம் வளராநின்ற இக்கொங்கைகளைத் தாங்கி; தளர் மருங்குல் பிணியுறப் பேதை இன்று
சென்று எய்தும் ஆல் - தளராநின்ற மருங்குலையுடைய இவள் வருந்த இப்பேதை இன்றுசென்றெய்தும்; ஆயிற்
பெரிதும் இஃதிளிவரவுடைத்து எ-று.
இதற்குப் பிறிதுரைப்பாருமுளர்.
பாற்செலு மொழியார். . . புகன்றது-கேட்டார்க்குப் பாலின் கணுணர்வு செல்லு மொழியையுடைய மகளிர்
மேற்சென்று தூதுவிட விரும்பல் பொல்லாதென இல்லோர் கூறியது. பால்போலு மொழியெனினு மமையும்.
ஈண்டுச் செல்லுமென்பது உவமைச் சொல். பேதையென்பது செவ்வணியணிந்து செல்கின்ற மாதரை. மெய்ப்பாடு:
நகை, எள்ளற் பொருட்டாகலின். பயன்: தலைமகனைச் செலவழுங்குவித்தல். சி்றைப்புறத்தானாக, இல்லோர்
சொல்லியது.
359
|