பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
579

அண

பரத்தையிற் பிரிவு

    அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
        லாயநல் லார்கண்முன்னே
    பணியுறத் தோன்றும் நுடங்கிடை
        யார்கள் பயின்மனைக்கே.

359

25.9. அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல்

   
அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் என்பது இல்லோர் செவ்வணிவிடுக்க நினையாநிற்ப, அயலார்முன்னே இவளால் இக்குறியறிந்த விடத்து ஒருத்தி நமக்குத்தர நாமவனை யெய்தும் படியாயிற்று நம்முடைய பெண்டன்மையென அயலறிவுரைத்துத் தலைமகள் அழுக்கமுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

360. இரவணை யும்மதி யேர்நுத
        லார்நுதிக் கோலஞ்செய்து
    குரவணை யுங்குழல் இங்கிவ
        ளால்இக் குறியறிவித்
    தரவணை யுஞ்சடை யோன்தில்லை
        யூரனை யாங்கொருத்தி
    தரவணை யும்பரி சாயின
        வாறுநந் தன்மைகளே.

360

_____________________________________________________________

25.9.  உலகிய லறியச் செலவிட லுற்ற
      விழுத்தகை மாதர்க் கழுக்கஞ் சென்றது.


   
இதன் பொருள்: இரவு அணையும் மதி ஏர் நுதலார்நுதி - இரவைச் சேரும் பிறைபோலு நுதலை யுடையாரது முன்; கோலம் செய்து-செவ்வணியாகிய கோலத்தைச் செய்து; குரவு அணையும் குழல் இங்கிவளால் இக் குறி அறிவித்து - குரவம்பூச் சேருங் குழலையுடைய இவளால் இக்குறியையறிவித்து; அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை-பாம்புசேருஞ் சடையையுடையவனது தில்லையிலூரனை; ஆங்கு ஒருத்தி தர-பின் அவ்விடத்து ஒருத்தி நமக்குத் தர; அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகள் - நாமவனை யெய்தும்படி யாயினவாறென் நம்முடைய பெண்டன்மைகள்! எ-று.

   
நுதலார்நுதியறிவித்தென வியையும். குறி - பூப்புநிகழ்தற் குறி. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

360