|
25
பரத்தையிற்
பிரிவு
25.11 மனைபுகல்கண்டவாயிலவர்கூறல்
மனைபுகல்கண்டவாயிலவர்கூறல் என்பது
செவ்வணி கண்ட தலைமகன் பரத்தையிடத்தினின்றும் வந்து தடையின்றி மனைவயிற்புகுதாநிற்ப, பண்டிரவும்பகலும்
வாயில்பெறாது நின்றுணங்கும் இக்காவலையுடைய கடையை இத்துணைக் காலத்திற் கழிந்து
வாயிலின்றிப் புகுதாநின்றான், மனைக்கடன் பூண்டலான் இனிப் புலந்து அடங்காதார் ஒருவருமில்லை
யெனத் தலைமகள் வாயிலவர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
362. குராப்பயில் கூழை
யிவளின்மிக்
கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
புகுமிக் கடிமனைக்கே.
362
_____________________________________________________________
25.11. கடனறிந் தூரன் கடிமனை
புகுதர
வாய்ந்த வாயிலவ ராய்ந்து ரைத்தது.
இதன் பொருள்: பண்டு இராப்பகல்
நின்று உணங்கு ஈர்ங்கடை-முற்காலத்து இரவும்பகலுந் தான் வாயில் பெறாது நின்று வாடும் இக்குளி்ர்ச்சியையுடைய
கடையை; இத்துணைப் போழ்தின் சென்றுநீட்டியாது இத்துணைக்காலத்திற் கழிந்து; கராப்பயில் பூம்
புனல் ஊரன் இக்கடி மனைக்குப் புகும் - கராம்பயில்கின்ற பூம்புனலை யுடைய வூரையுடையான் இக்காவலையுடைய
மனைக்கட்புகா நின்றான், அதனான், குராப்பயில் கூழை இவளின் மிக்கு - குராப்பூப் பயின்ற குழலையுடைய
இவளினும் மேம்பட்டு; அம்பலத்தான் குழையாம் அராப் பயில் நுண் இடையார் அடங்கார் எவர்-அம்பலத்தான்
குழையாகிய அரவுபோலும் நுண்ணிய விடையினை யுடையார் புலந்தடங்காதார் இனி யாவர்! மனைக்கடன்
பூண்டலான் எல்லாருமடங்குவர் எ-று.
கராம்பயிலென்பது கராப்பயிலென
வலிந்து நின்றது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்.
362
|