பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
582

25

பரத்தையிற் பிரிவு

25.12. முகமலர்ச்சிகூறல்

   
முகமலர்ச்சிகூறல் என்பது பரத்தையிற்பிரிந்த தலைமகன் செவ்வணிகண்டு வந்தானென்று சொல்லுமளவில், தலைமகள் கண்கள் சிவந்தன; அப்புலவி நோக்கத்தெதிர் காதலனோக்க, அச்சிவப்பாறி முகமலர்ந்தமையை அவ்விடத்துக்கண்டவர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

363. வந்தான் வயலணி யூர
        னெனச்சின வாள்மலர்க்கண்
    செந்தா மரைச்செல்வி சென்றசிற்
        றம்பல வன்னருளான்
    முந்தா யினவியன் நோக்கெதிர்
        நோக்க முகமடுவிற்
    பைந்தாட் குவளைகள் பூத்திருள்
        சூழ்ந்து பயின்றனவே.

363

_______________________________________________________________

25.12.  பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
      தேம்புனை கோதை திறம்பிற ருரைத்தது.


   
இதன் பொருள்: வந்தான் வயல் அணி ஊரன் என - வந்தான் வயலணிந்த வூரனென்று சொல்லுமளவில்; சின வாள் மலர்க்கண் செந்தாமரைச் செவ்வி சென்ற - சினவாள் போலுமலர்க்கண்கள் சிவந்த தாமரைப்பூவினது செவ்வியையடைந்தன; சிற்றம்பலவன் அருளான் முந்தாயின வியன் நோக்கு எதிர்நோக்க - சிற்றம்பலவன தருளான் முன்னுண்டாகிய பெரிய அப்புலவி நோக்கெதிர் காதலனோக்க; முக மடுவின் பைந்தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றன - கதுமெனப் பின் முகமாகிய மடுவிற் பைந்தாளையுடைய குவளைப்பூக்கள் மலர்ந்திருண்டு நெருங்கின; என்னவில்லறக் கிழத்தியோ! எ-று.

   
இயனோக்கென்று பிரித்து முன்னுண்டாகிய துனித்த லியல்பை யுடைய நோக்கென் றுரைப்பினு மமையும். கண்களது பிறழ்ச்சிப் பன்மையாற் குவளைப்பூக்கள் பல கூடினாற் போன்றிருந்தன வென்பது போதர, பயின்றனவென்றார். காதலனோடு பழகின வெனினுமமையும். தலைமகற்குப் புலவிக் காலத்து வருந்துன்ப மிகுதியும் புலவிநீக்கத்துவரு மின்பமிகுதியும் நோக்கி, சிற்றம்பலவ