|
25
பரத்தையிற்
பிரிவு
25.13 காலநிகழ்வுரைத்தல்
காலநிகழ்வுரைத்தல் என்பது பரத்தையிற்
பிரிந்துவந்த தலைமகனது ஆற்றாமையைத் தலைமகள் நீக்காதிருப்ப, வண்டூது மல்லிகைப்போதானும் அந்திப்
பிறையானுங் கங்குற் பொழுதானும் ஆற்றானாய்ப் புகுதராநின்றான்; இனி நீ புலக்கற் பாலையல்லையென
உழையர் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
364. வில்லிகைப் போதின்
விரும்பா
அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண்
சங்கம்வண்
டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
லூரற் கெதிர்கொண்டதே.
364
_____________________________________________________________
னருளாலெனக்
காரணத்தை மிகுத்துக் கூறினார். மெய்ப்பாடும், பயனும் அவை.
363
25.13. இகழ்வ தெவன்கொல் நிகழ்வதிவ்
வாறெனச்
செழுமலர் கோதை உழையர் உரைத்தது.
இதன் பொருள்: வில்லி கைப்
போதின் விரும்பா அரும்பாவிய வர்கள் அன்பிற் செல்லி - காமன் கையி லம்பாகிய பூக்களில்
ஆதரமில்லாத அரிய குறிப்பை யுடையவர்கள் தனக்குச் செய்த அன்பின்கண் வேட்டுச்செல்வோன்; கைப்
போதின் எரி உடையோன் - கையாகிய பூவின்கணுளதாகிய எரியையுடையான்; தில்லையம்பலம் சூழ் மல்லிகைப்
போதின் வெண் சங்கம் வண்டு ஊத - அவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த மல்லிகையின் போதாகிய
வெண்சங்கை வண்டுகளூத; விண் தோய் பிறையோடுஎல்லி -விண்ணையடைந்த பிறையோடு இராப்பொழுது; கைப்
போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டது - கையாகிய பூவின்கணியலும் வேலையுடைய வயலூரற்கு
மாறு கொண்டது எ-று.
என்றது வண்டூதுமல்லிகைப்போதானும்
அந்திப்பிறை யானுங் கங்குற் பொழுதானும் ஆற்றானாய்ப் புகுதராநின்றான்; இனி நீ புலக்கற்பாலையல்லையென
வாயினேர்வித்தவாறு. வில்லிகைப்
|