பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
584

25

பரத்தையிற் பிரிவு

25.14 எய்தலெடுத்துரைத்தல்

   
எய்தலெடுத்துரைத்தல் என்பது பரத்தையிற்பிரிந்துவந்த தலைமகன் பூப்பு நிகழ்ந்த கிழத்தியைப் புலவிதீர்த்து இன்புறப் பண்ணி எய்தலுற்று மகிழ்ந்தமையை அவ்விடத்துள்ளார் எடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

365. புலவித் திரைபொரச் சீறடிப்
        பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
    கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
        றெய்திக் கதிர்கொண்முத்தம்

____________________________________________________________

போதாற் புலன்களை விரும்பாத அரும்பாவியரெனினுமமையும். கைப்போதின்கண்ணே யெரியையுடையானெனினுமமையும். இகழ்தல்-தலைமகனாற்றாமை நீங்காதிருத்தல். எல்லி ஊரற்கு வாயிலாக வேற்றுக்கொண்டது புலவாதுண்ணெகிழ்ந்தாளென்றி வளை நாமிகழ்கின்றதென் இது வன்றோ பொழுதென உழையர் தம்முட்புறங் கூறினாராகவுரைப் பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலை மகளைச் சிவப்பாற்றுவித்தல்.

364

25.14.  சீரிய லுலகிற் றிகழ்தரக் கூடி
      வார்புன லூரன் மகிழ் வுற்றது.


   
இதன் பொருள்: புலவித் திரை பொர - புலவியாகிய திரைவந்து மாறுபட; சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்ப - காதலி சிற்றடியாகிய பொலிவினையுடைய வணியைத் தன்சென்னியி லுய்த்தலான் அப்புலவிநீங்க; கலவிக் கடலுள் கலிங்கம் சென்று எய்தி - கலவியாகிய கடலுள் துகிலைச் சென்று பற்றி; கதிர்கொள் முத்தம் நிலவி நிறை மது ஆர்ந்து - எயிறாகிய வொளிபொருந்தின முத்தின்கட் பொருந்தி நிறைந்த நீராகிய மதுவைப்பருகி; அம்பலத்து நின்றோன் அருள் போன்று உலவு இயலாத் தனம் - அம்பலத்து நின்றவனதருளை யொத்து ஒருஞான்றுந் தளர்தலில்லாத முலைகள்; ஊரனுக்குச் சென்று எய்தல் ஆயின - ஊரற்குச் சென்று பெறலாயின எ-று.

   
புலவுநாறித் திரைகள் வந்துமோதச் சிறியவடியையுடைய பொலிவையுடைய மரக்கலத்தைக் கடலின் சென்னியிலே செலுத்தக் கடலுட்கலந்து கலிங்கமாகிய தேயத்தைச்சென்றெய்தி ஒளி பொருந்திய முத்துக்கள் தன்கண்வந்து நிலைபெற அவ்விடத்துள்ள மதுக்களை நுகர்ந்து அம்பலத்து நின்றவனதருளையொத்து ஒரு