|
ந
பரத்தையிற்
பிரிவு
நிலவி நிறைமது ஆர்ந்தம்
பலத்துநின்
றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
லாயின வூரனுக்கே.
365
25.15 கலவிகருதிப்புலத்தல்
கலவிகருதிப்புலத்தல் என்பது புலவிதீர்த்து
இன்புறப் புணரப்பட்டு மயங்காநின்ற தலைமகள், தனக்கவன்செய்த தலையளியை நினைந்து, இவ்வாறருளுமருள்
ஒருஞான்று பிறர்க்குமா மெனவுட்கொண்டு பொருமியழுது, பின்னுமவனோடு கலவிகருதிப் புலவாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
366. செவ்வாய் துடிப்பக்
கருங்கண்
பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன்
அருளின்
முயங்கி மயங்குகின்றாள்
____________________________________________________________
ஞான்றுங் கேடில்லாதபொருள் சென்றெய்தலாயினவென
வேறு மொருபொருள் விளங்கியவாறறிக. சீரியலுலகிற் றிகழ்தரக்கூடி - சீர்மையியன்ற வுலகினுள்ள
வின்பமெல்லாவற்றினும் விளங்கக்கூடி. சீரியலுலகு - தேவருலகுமாம். இதுவுந் துறைகூறிய கருத்து. மகிழ்வுற்ற
தென இன்னார் கூற்றென்னாது துறைகூறினார். மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்.
365
25.15. மன்னிய வுலகில்
துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி யெய்தியது.
இதன் பொருள்: இன்
நகை - இன்னகையையுடையாள்; செவ்வாய் துடிப்ப - செய்ய வாய் துடிப்ப; கருங்கண் பிறழ - கரிய கண்கள்
பிறழ; சிற்றம்பலத்து எம் மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் - சிற்றம்பலத்தின்கணுளனாகிய
எம்முடைய நெருங்கிய நீண்ட சடையையுடையவன தருள்பெற்றவர் போல முயங்கி இன்பக்களியின் மயங்குகின்றவள்;
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து -இவ்வாறு நமக்கருளுமருள் ஒருஞான்று பிறர்க்குமாமென
ஒன்றனையுட்கொண்டு; வெவ்வாய் உயிர்ப்போடு விம்மிக் கலுழ்ந்து - வெய்ய விடத்தையுடைய நெட்டுயிர்ப்போடு
பொருமியழுது; புலந்து நைந்தாள் -புலந்து வருந்தினாள் எ-று.
|