|
New Page 1
பரத்தையிற்
பிரிவு
வெவ்வா யுயிர்ப்பொடு
விம்மிக்
கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
மெனநினைந் தின்னகையே.
366
25.16 குறிப்பறிந்து புலந்தமை
கூறல்
குறிப்பறிந்து புலந்தமை கூறல் என்பது
புலவி தீர்ந்து கலுழ்ந்து புணர்ந்து தானுமவனுமேயாய்ப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், பின்னுமொருகுறிப்பு
வேறுபாடுகண்டு புலந்து, இப்பள்ளிபலரைப் பொறா தென்றிழிய, இப்பொழுது இவளிவ்வா றிழிதற்குக்
கருதிய குறிப்பென்னை கொல்லோவென உழையர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
367. மலரைப் பொறாவடி மானுந்
தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
றாள்பள்ளி காமனெய்த
________________________________________________
அருளின் முயங்குகின்றாளென்புழி
அருள் பெற்றவர் உவமையாதல் ஆற்றலான்வந்தது. அருளான் முயங்கி யென்பாருமுளர். வெவ்வாயுயிர்ப்பென்பது
“கலுழ்கட் சின்னீர்” என்பதுபோல நின்றது. தவறுபற்றிப் புலப்பளென்று நீ கூறுதி; இதுவன்றோ இவள்
புலக்கின்றவாறெனத் தோழிக்குத் தலைமகன் கூறியது. மன்னிய வுலகிற்றுன்னிய வன்பொடு - நிலைபெற்ற
வுலகத்தின் வைத்துச் செறிந்த வன்போடு. இதுவுந் துறைகூறிய கருத்து. மெய்ப்பாடு: உவகையைச்சார்ந்த
வெகுளி; பெருமிதமு மாம். பயன்: அது.
366
25.16. குறிப்பினிற் குறிப்பு
நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி
யுற்றது.
இதன் பொருள்: மன்னன்
ஒருவன் - மன்னன் ஒருவன்; மலரைப் பொறாஅடி மானும் தமியள் - மென்மையான் மலரையும் பொறாத
வடியையுடைய மானுந்தமியளே; ஆயினும், பள்ளி பலரைப் பொறாது என்று இழிந்து நின்றாள் - இப்பள்ளி
பலரைத்தாங்காதென்றுகூறிப் பள்ளியினின்று மிழிந்துநின்றாள்; காமன் எய்த அலரைப் பொறாது அன்று
அழல் விழித்தோன் அம்பலம்வணங்கா - காமனெய்த அலரம்பை வெகுண்டு அன்றழலாகிய கண்ணை
|