|
25
பரத்தையிற்
பிரிவு
25.18
புனல் வரவுரைத்தல்
புனல் வரவுரைத்தல் என்பது
தலைமகளுடன் மனைவயிற்றங்கி யின்புறா நின்றவனது தோள்களைப் பரத்தையர்பொருந்தி மகிழப்
புதுப்புனல் வந்து பரந்தது; இனிப் புனலாட்டினால் இவன்காதலி புலக்கும்போலுமென, வையத்தார் தம்முட்
புனல்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
369. சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
குதர்செம்ம லூரன்திண்டோள்
_____________________________________________________________
25.18. புனலா டுகவெனப்
புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வைய முரைத்தது.
இதன் பொருள்: சூன் முதிர்
துள்ளு நடைப் பெடைக்கு - சூன்முதிர்ந்த துள்ளுநடையை யுடைத்தாகிய பெடைக்கு; இல்செய்வான் துணைச்
சேவல் -ஈனுமில்லைச் செய்யவேண்டித் துணையாகியசேவல்; தேன் முதிர்வேழத்தின் மென்பூக் குதர் -
தேன் போலுஞ் சாறுமுதிர்ந்த கரும்பினது மெல்லிய பூகைக்கோதும்; செம்மல் ஊரன் திண் தோள் -
தலைமையை யுடையவூரனது திண்ணிய தோள்களை; மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ - மானினது நோக்கம்போலு
நோக்கினையுடைய நல்லார்கூடி இன்புற; தில்லையான் அருளே போல் முதிர் பொய்கையில் வாய்ந்த
புதுப் புனல் பாய்ந்தது - தில்லையான தருளை யொத்து நீர் முதிர்ந்த பொய்கையுள் நல்ல
புதுப்புனல் பாய்ந்தது; இனிப் புனலாட்டினாற் றன்காதலியைச் சிவப்பிக்கும்போலும் எ-று.
சூன்முதிர்தலாற் குறுகவடியிடுதலிற்
றுள்ளு நடையென்றார். தில்லையானருள் பெற்றவர் போல நல்லார் மகிழவென்றுரைப்பாருமுளர். சேவலன்னந்
தன் சூன்முதிர்ந்தபெடைக்கு ஈனில் லிழைத்துப் பாதுகாக்கின்றாற் போல இவனுந் தன்காதலிக்கு வேண்டுவன
செய்து மனைவயிற்றங்கி யின்புறுகின்றானென உள்ளுறை காண்க. துன்னுநடையென்று பாடமோதி, சூன் முதிர்தலாற்
பயில அடியிடுநடையென்றுரைப்பாருமுளர். வெண்பூவென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்:
பிரிவுணர்த்துதல்.
369
|