பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
590

ம

பரத்தையிற் பிரிவு

மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்
        தில்லை யானருளே
    போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
        வாய்ந்த புதுப்புனலே.

369

25.19 தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல்

   
தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல் என்பது புனல் வரவு கேட்டதலைமகன் புனலாட்டு விழாவிற்குப் பரத்தையர் சேரிக்கட் செல்லாநிற்ப, இவனைப் புணர்தற்குத் தக்க தவத்தினை முற்காலத்தே செய்தீர்கள்; தேர்வந்து தோன்றிற்று; இனிச்சென்று இவனது தோளிணையைத் தோய்மினெனத் தேர்வரவு கண்டு பரத்தையர் தம்முண் மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

370. சேயே யெனமன்னு தீம்புன
        லூரன்திண் டோளிணைகள்
    தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
        தீர்சுடர் கின்றகொலந்

_____________________________________________________________

25.19.  பயின்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
      கயன்மணிக் கண்ணியர் கட்டு ரைத்தது.


   
இதன் பொருள்: சுடர்கின்ற கொலம் தீயே என மன்னு - சுடரா நின்றவடிவு தீயேயென்றுசொல்ல நிலைபெற்ற; சிற்றம்பலவர் தில்லைநகர்வாய் வீயே என அடியீர் - சிற்றம்பலவரது தில்லைநகரிடத்துள்ளீராகிய பூவையொக்கு மடியையுடையீர்; நெடுந் தேர் வந்து மேவினது - நெடியதேர் ஈண்டுவந்து மேவிற்று; புணர் தவம் தொன்மை செய்தீர் - இவனைப் புணர்தற்குத் தக்கதவத்தை முற்காலத்துச் செய்தீர்கள்; சேயே என மன்னு தீம் புனல் ஊரன்திண் தோள் இணைகள் தோயீர் - வடிவு முருகவேளேயென்று சொல்ல நிலைபெறா நின்ற இனிய புனலையுடைத்தாகிய வூரையுடையவனது திண்ணிய தோளிணைகளையினியணைமின் எ-று.

   
ஒன்றற் கொன்றிணையாயிருத்தலின் இணையெனத் தனித்தனி கூறப்பட்டன. இதுவும் ஊடனிமித்தம். கோலமெனற்பாலது கொலமெனக் குறுகி நின்றது. கயன்மணிக்கண்ணியென்பது பாடமாயின், பரத்தையர் சேரிக்கட்டலைமகனது தேர்செல்லத் தலைமகணொந் துரைத்ததாம். இப்பொருட்கு நெடுந்தேர் நுமது