பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
591

த

பரத்தையிற் பிரிவு

    தீயே யெனமன்னு சிற்றம்
        பலவர்தில் லைந்நகர்வாய்
    வீயே யெனஅடி யீர்நெடுந்
       தேர்வந்து மேவினதே.

370

25.20 புனல் விளையாட்டிற்றம்முளுரைத்தல்

   
புனல் விளையாட்டிற்றம்முளுரைத்தல் என்பது தலைமகனுடன் புனலாடாநின்ற பரத்தையர் சேடிமார் அரமங்கையரைப் போலப்புனலாடாநின்ற அவ்வவரேயென்று விளித்து, நாமெல்லாமித் தன்மையேமாக வானரமங்கையரென்று சொல்லும்வண்ணம் மற்றொருத்திவந்து இவனைத் திரித்துக் கொள்ளக்கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக்காப் போமெனத் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

371. அரமங் கையரென வந்து
        விழாப்புகும் அவ்வவர்வான்
    அரமங் கையரென வந்தணு
        கும்மவ ளன்றுகிராற்

____________________________________________________________

சேரிக்கண்வந்து தங்கிற்றென் றுரைக்க, மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகன்வரவு சேரிப் பரத்தையர்க்குப் பாங்காயினார் அவர்க்குணர்த்துதல்.

370

25.20.  தீம்புனல் வாயிற் சேயிழை வருமெனக்
      காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.


   
இதன் பொருள்: அரமங்கையர் என வந்து விழாப் புகும் அவ்வவர்-அரமங்கையரைப்போல வந்து புனலாட்டு விழவின்கட் புகாநின்ற அவரவரே; வான் அரமங்கையர் என அவள் வந்து அணுகும் - நாமெல்லாம் இத்தன்மையேமாக, வானிடத் தரமங்கைய ரென்று கருதும்வண்ணம் அவள் வந்தணுகாநின்றாள், அணுகித் தன்னிடத் திவரைத்திரிப்ப; அன்று அங்கு உகிரான் அயனைச் சிரஞ்செற்றோன் தில்லை - அன்று அவ்விடத்து உகிரால் அயனைச் சிரந் தடிந்தவனது தில்லையின் சிற்றம்பலம் வழுத்தாப் புரமங்கையரின் நையாது; சிற்றம்பலத்தை வழுத்தாத புரங்களின் மங்கையரைப் போலப் பின்வருந்தாது - நம் பொற்பரை ஐயகாத்தும் - நம் பொற்பரை வியப்ப முன்னுடைத்தாகக் காப்பேம் எ-று.