பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
592

ச

பரத்தையிற் பிரிவு

    சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
        சிற்றம் பலம்வழுத்தாப்
    புரமங் கையரின்நை யாதைய
        காத்துநம் பொற்பரையே.

371

25.21 தன்னை வியந்துரைத்தல்

   
தன்னை வியந்துரைத்தல் என்பது சேடிமார் பின் வருந்தாது முன்னுறக் காப்பேமென்று தம்முட் கூறுவதனைக் கேட்டு, இவனை அமரப் புல்லும் பரத்தையர்மாட்டு இவனருள் செல்லாமல் விலக்கேனாயின் எம்மாட்டிவனைத் தந்தழாநின்ற இவன் மனைக்கிழத்தியாகின்றேனெனப் பரத்தைத்தலைவி தன்னைவியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

372. கனலூர் கணைதுணை யூர்கெடச்
        செற்றசிற் றம்பலத்தெம்
    அனலூர் சடையோ னருள்பெற்
        றவரின் அமரப்புல்லும்

________________________________________________

அரமங்கையர் - தேவப் பெண்களுக்குப் பொதுப்பெயர். வானரமங்கைய -ரென்றது அவரின்மேலாகிய உருப்பசி திலோத்தமை முதலாயினாரை. வானரமங்கையை ரென்றது சாதியை நோக்கி நின்றது. ஐயபொற்பரையெனக் கூட்டினுமமையும். அவளென்றதும் சேயிழையென்றதும் பரத்தையரிற் றலைவியாகிய இற்பரத்தையை.

    பரத்தைவாயி லெனவிரு கூற்றுங்
    கிழவோட் சுட்டாக் கிளப்புப்பய னிலவே

(தொல்-பொருள்-செய்யுள்-190) என்பதனால் இதுகிழவோட்சுட்டாக் கிளப்பாயினும், இப்பரத்தையரது மாறுபாடு தலைமகளூடுதற்கு நிமித்தமாகலிற் பயனுடைத்தாம். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தலைமகனைத் தங்கட்டாழ் வித்தல்.

371

25.21.  அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
      முனிவு தோன்ற நனிபு கன்றது.


   
இதன் பொருள்: கனல் ஊர் கணை துணை ஊர் கெடச் செற்ற - கனல் பரந்தகணையான் ஒத்தவூர்கெட வெகுண்ட; சிற்றம்பலத்து எம்