|
ம
பரத்தையிற்
பிரிவு
மினலூர் நகையவர் தம்பா
லருள்விலக்
காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
லூர்கணப் பூங்கொடியே.
372
_______________________________________________________________
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின்
- சிற்றம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய அனலை யொக்குஞ் சடையையுடையவனதருளைப் பெற்றவர்போலச்
செம்மாந்து; அமரப் புல்லும் மினல் ஊர் நகையவர் தம்பால் அருள் விலக்கா விடின் - அவனைச் செறியப்புல்லாநின்ற
ஒளிபரந்த நகையையுடையவர் தம்மிடத்து அவனருள்செல்லாமை விலக்கேனாயின்; யான் புனல் ஊரனை
பிரியும் புனல் ஊர்கண் அப்பூங்கொடி - யான் புனலூரனைப் பிரிந்திருக்கும் புனல் பரக்குங் கண்ணையுடைய
அவன்மனைக் கிழத்தியாகிய அப்பூங்கொடி யாகின்றேன் எ-று.
கணைதுணை யெனச் செய்யுளின்ப நோக்கி
மிகாதுநின்றது. கணையென்பதனை யெழுவாயாக்கி யுரைப்பாருமுளர்.
“பரத்தையிற்பிரிவே நிலத்திரி
வின்றே”
(இறையனாகப் பொருள் - 42) என்பதனால்,
இவரதில்லந் தம்மில் வேறுபாடில்லாமையறிக. மெய்ப்பாடு: வெகுளி. பயன்: தனது பீடுணர்த்தல்.
372
|