பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
594

25

பரத்தையிற் பிரிவு

25.22 நகைத்துரைத்தல்

    நகைத்துரைத்தல் என்பது பரத்தைத்தலைவி தன்னை வியந்து கூறினாளென்று கேட்ட தலைமகள், எங்கைச்சியார் தமக்கும் ஒரு தங்கைச்சியார் தோன்றினபொழுதே தம்மிறு மாப்பொழியத் தம்முடைய இணைமுலைகளின திறுமாப்பும் ஒழியப் புகாநின்றது; இதனை யறியாது தம்மைத்தாம் வியக்கின்ற தென்னோவெனப் பரத்தையை நோக்கி நகைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

373. இறுமாப் பொழியுமன் றேதங்கை
        தோன்றினென் னெங்கையங்கைச்
    சிறுமான் தரித்தசிற் றம்பலத்
        தான்தில்லை யூரன்திண்டோள்

_______________________________________________________________

25.22.  வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
       பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.


   
இதன் பொருள: அங் கைச் சிறுமான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண்தோள் - அங்கைக்கண்ணே சிறிய மானைத்தரித்த சிற்றம்பலத்தானது தில்லைக்கணுளனாகிய ஊரனுடைய திண்ணிய தோள்களை; பெறு மாத்தொடும் - பெறுதலானுண்டாகிய பெருமையோடும்; தன்ன பேர் அணுக்குப் பெற்ற பெற்றியினோடு - தன்னவாகிய அவனோ டுண்டாகிய பெரிய அணுக்கைப்பெற்ற தன்மைகளோடும்; இறுமாப்பு ஒழிய -தான் செம்மாத்தலையொழிய; இணை முலை இறுமாப்பு ஒழிந்த -இணைமுலைகள் ஏந்துதலை யொழியப் புகாநின்றன. தங்கை தோன்றின் -இனித் தனக்கொரு தங்கை தோன்றின்; என் எங்கை இறுமாப்பு ஒழியும் அன்றே - என்னுடைய வெங்கையும் செம்மாத்தலை யொழியுமன்றே; அதனான் வருவதறியாது தன்னைப் புகழ்கின்றாள் எ-று.

    எங்கையென்றது என்றங்கை யென்றவாறாயினும், என் னெங்கையென இயைபு மிகுதிகூறி நகையாடினாள். மாத்து - தலைமகற்குரியளாய் நிற்றலான் உண்டாகிய வரிசை. பெற்றி - அணுக்காற்றன்னை மதித்தல். தன்னபெற்றியென வியையும். பெற்றியினோடு மென்னு மும்மை தொக்கு நின்றது. ஒழிந்தவென்னு மிறந்த காலம் விரைவுபற்றி வந்தது. மெய்ப்பாடு: வெகுளியைச்சார்ந்த